மேலும் அறிய

CTR Nirmal Kumar: திமுக ஆட்சியில் மினிஸ்டர் கட்டிங்.. தப்பு யார் பண்ணாலும் ஆக்‌ஷன் தான்.. நிர்மல்குமார் எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் சிறையில் நடைபெற்ற மரணங்கள் மூடி மறைக்கப்பட்டது. ஆனால் தவெக அரசில் அதன்மீது வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

சிறை மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் உறுதியாக தெரிவித்துள்ளார். 

சிறை மரணங்களுக்கு வெளிப்படையான நடவடிக்கை

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில், “நாகர்கோயிலில் சிறைக்குள் விசாரணை கைதி சபரி வர்மன் உயிரிழந்த சம்பவம்” பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “கடந்த திமுக ஆட்சியில் சிறையில் நடைபெற்ற மரணங்கள் மூடி மறைக்கப்பட்டது. ஆனால் தவெக அரசில் அதன்மீது வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு நடத்ததாக தெரிய வந்ததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் முந்தைய அரசில் நிகழ்ந்த சிறை மரணங்களுக்கு குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் புழல் சிறையில் கூட ஒரு கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். 

சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை

தொடர்ந்து பழனி கோயில் நிலம் மோசடி தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிடிஆர் நிர்மல்குமார், “திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறை ஊழலில் திளைத்துள்ளது. இரவு 9 மணி வரையெல்லாம் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. தவெக ஆட்சியில் இந்த துறை முழுவதுமாக சீரமைக்கப்படும். திமுகவில் அமைச்சராக இருந்த மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என வாங்கினார். அதனை வசூலிக்க ஒவ்வொரு அலுவலகத்திற்கு 2 பேர் இருந்தனர். 

Also Read: TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்

எனவே போலி பத்திரப்பதிவு குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவெக ஆட்சியில் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை.  மேலும் பழனி கோயில் நில விவகாரத்தில் தவெகவினரைச் சேர்ந்த யாருக்கும் தொடர்பில்லை. தவறு எங்கு நடந்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். 

பாஜகவோடு கைகோர்க்கும் திமுக, அதிமுக

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 2 மாதங்களாக திமுக,அதிமுக பாஜக துணையோடு ஆட்சியமைக்க முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கின்றோம். அடுத்த ஓராண்டில் நடக்கப்போகிறதை சொல்கிறேன். திமுக, அதிமுக கட்சியை நடத்த முடியாமல் பாஜகவுடன் இணையும். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சரவையில் 2 இடங்கள் பெறும் சூழல் அமையும். இப்போதைக்கு இருவருக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு காலத்தை ஓட்டுவதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தவெக எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் பணி சென்றுக் கொண்டிருக்கிறது” என சிடிஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget