மேலும் அறிய
Advertisement
மிக்ஜாம் புயல் பாதிப்பு: தருமபுரியில் இருந்து சென்னைக்கு10 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைப்பு
தருமபுரி மாவட்டத்தில் இருந்து இன்று முதல் நிவாரண பொருளாக சென்னைக்கு அரிசி மூட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரூபாய் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசியை தருமபுரி தனியார் கல்லூரி குழும தலைவர் பாஸ்கரன் லாரி மூலமாக அனுப்பி வைத்தார்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், ராம் நகர் , குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க தமிழக முதல்வர் வேண்கோள் விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரி குழும தலைவர் பச்சமுத்து பாஸ்கரன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு மூலமாக வழங்க முதற்கட்டமாக 10 டன் அரிசி மூட்டைகளை வழங்கினார். இன்று சிறிய சிப்பங்களாக அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றி, மகளிர் கல்லூரியிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். மேலும் நாளொன்றுக்கு 10 டன் வீதம் 5 நாட்களுக்கு 50 டன் அரிசி பாக்கெட்களை லாரி மூலம் அனுப்ப உள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் இருந்து இன்று முதல் நிவாரண பொருளாக சென்னைக்கு அரிசி மூட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion