91 Years of Mettur Dam: 91-வது ஆண்டில் கம்பீரமாக அடி எடுத்து வைக்கும் மேட்டூர் அணை; இதன் வரலாறு தெரியுமா?
1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அப்போதைய ஆங்கில ஆட்சியில் சென்னை கர்ணலாக இருந்த சர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி மேட்டூர் அணையைத் முதன் முறையாக திறந்து வைத்தார்.

தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் தாயாக விளங்கும் மேட்டூர் அணை இன்று தனது 90 ஆண்டுகள் நிறைவு பெற்று 91வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மேட்டூர் அணையானது 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது.
மேட்டூர் அணை உருவான வரலாறு:
கர்நாடகா மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறானது கர்நாடகா மற்றும் தமிழக வழியாக சென்று கடலில் கலக்கும். இதில் கர்நாடக மாநிலத்தில் குறைந்த அளவு பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. தமிழகத்தின் வழியாக சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்லும் காவிரி ஆறு செல்கிறது. ஆனால் பருவமழை வரும்போது நீர் தேக்கத்திற்கு வலியில்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு அன்றைய ஆங்கிலேய அரசு நீர் தேக்கத்திற்காக மேட்டூர் அணை கட்டுவதற்கு 1925 ஆம் ஆண்டு அணை கட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு இன்ஜினியராக கர்னல் W.L. எல்லீஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் அணை கட்ட தொடங்கினர். அணையின் கட்டுமான பணி சுமார் 9 ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர் 1934 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி மேட்டூர் அணை கட்டுமான பணி முழுமையாக நிறைவடைந்தது. மேட்டூர் அணை கட்டுவதற்கான செலவு தொகை ரூபாய் 4 கோடியே 80 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அப்போதைய ஆங்கில ஆட்சியில் சென்னை கர்ணலாக இருந்த சர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி அணையைத் முதன் முறையாக திறந்து வைத்தார்.
பாசன வசதி:
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் குறுவை, சம்பா சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகிறது. மேட்டூர் அணை நீளம் 5,300 அடியும், அணையின் நீர்த்தேக்க பகுதி 59.25 சதுர மைல் ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 120 அடி வரை நீர் சேமிப்பு வைக்கலாம். பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதற்கு அணையின் நீர்மட்ட அழகைப் பொறுத்து மேல்மட்ட மதகு, கீழ் மட்டம் மதகு, மின் நிலை மதகு என மூன்று நிலை மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பதற்காக 16 கண் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதகுகள் 20 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்டதாகும். உபரி நீர் திறக்கும் 16 கண் மதகிற்கு மேட்டூர் அணை கட்டுவதற்கு கண்காணிப்பு இன்ஜினியராக கர்னல் W.L. எல்லீஸ் கால்வாய் என பெயரிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12 அன்று 19 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்னதாக 11 முறை திறக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக 61 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணை சென்றடையும். தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய மூன்று ஆறுகள், 36 கிளை ஆறுகள் மற்றும் 26 ஆயிரம் கால்வாய்கள் வாயிலாக டெல்டா மாவட்டங்களை சென்றடைகின்றன.
கடுமையான காட்டாறு வெள்ளத்தை சுலபமாக தாங்கி நிற்கும் மேட்டூர் அணை தனது 91வது பிறந்த நாளை இன்று கம்பீரமாக கொண்டாடி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

