மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர் வரத்து இரண்டாம் நாளாக 486 கன அடியாக நீடிப்பு

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 495 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 486 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 486 கன அடியாக குறைந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர் வரத்து இரண்டாம் நாளாக 486 கன அடியாக நீடிப்பு

அணையின் நீர் மட்டம் 101.89 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 67.31 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 89 வது ஆண்டாக மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 6,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் முழுமையாக நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து இரண்டாம் நாளாக 486 கன அடியாக நீடிப்பு

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 91.66 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.95 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 262 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4048 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 35.88 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 5.53 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 27 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

தலைப்பு செய்திகள்

சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
Embed widget