மேலும் அறிய

Mettur Dam : வறட்சியில் மேட்டூர் அணை : ஜூன் 12ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12 அன்று டெல்டா பாசனத்திற்காக 18 முறை மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டெல்டா மாவட்ட விவசாயிகளும் தாயாக விளங்கும் மேட்டூர் அணை கடும் வறட்சியால் காணப்படுகிறது. மேட்டூர் அணையில் மொத்த நீர் இருப்பு 93.47 டி.எம்.சி., நீர்மட்டம் 120 அடி தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். 

89 ஆண்டு நீர் திறப்பு:

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12 அன்று 18 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்னதாக 11 முறை திறக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக 60 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.76 அடியாக இருந்த நிலையில் சுதந்திரத்திற்கு பின்னர் முதன்முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Mettur Dam : வறட்சியில் மேட்டூர் அணை : ஜூன் 12ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை.

விவசாயிகள் வேதனை:

கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படாததாலும், தென்மேற்கு பருவமழை பொய்யாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரியா தொடங்கியது. இதனால் நடப்பு ஆண்டு டெல்டா பாசனத்திற்காக குறிப்பிட்ட தேதியில் (இன்று) தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்பதால் தமிழ்நாடு டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக அணையின் நீர்மட்டம் 45 அடிக்கும் கீழ் உள்ளதால் நடப்பு ஆண்டு தண்ணீர் திறக்கப்படுமா? என்பதே சந்தேகமாக எடுத்துள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். 

விவசாயம் பாதிப்பு: 

மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட தேதியான ஜூம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள 12 டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து போகும் நிலை ஏற்படும். இதனால், மாவட்ட விவசாயிகள் குருவை சம்பா பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமானால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் அல்லது பருவமழை பெய்தால் மட்டுமே தண்ணீர் திறக்கும் முடியும் நிலையில் உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Mettur Dam : வறட்சியில் மேட்டூர் அணை : ஜூன் 12ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை.

நீர் நிலுவை:

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா, ஆண்டு தோறும் ஜூன் முதல் மே வரை தமிழகத்துக்கு, 177.25 டி.எம்.சி., வழங்க வேண்டும். கடந்த, 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், 2.83 டி.எம்.சி., ஜூலை மாதத்தில், 8.74, ஆகஸ்டில், 19.90, செப்டம்பரில், 13.58, அக்டோபரில், 12.84. நவம்பரில், 10.65, டிசம்பரில், 4, பின்னர் 2024 ஜனவரியில், 1.4, பிப்ரவரியில், 0.6, மார்ச்சில், 0.94, ஏப்ரலில், 0.43 என இதுவரை, 75.91 டி.எம்.சி., நீர் மட்டுமே கர்நாடகா மாநிலம் வழங்கியுள்ளது. இன்னும், 101.34 டி.எம்.சி., நீர் நிலுவை வைத்துள்ளது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் இருப்பு குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாகக் கூறி, தண்ணீர் தர முடியாது என கர்நாடகா மாநில அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

கடந்த ஆண்டு நீர் திறப்பு:

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக உரிய தேதியில் (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்பட்டதால் 16.5 லட்சம் ஏக்கர் வசனம் பெற்றது. கடந்த ஆண்டில் மட்டும் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டது. இதேபோன்று கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பையொட்டி தமிழக அரசு சார்பில் 4061 கி.மீ தூர்வாரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Rs.2000 for TN Women: மகளிருக்கு ரூ.2,000, ஆண்களுக்கு இலவச பயணம்: EPS வாக்குறுதி
Rs.2000 for TN Women: மகளிருக்கு ரூ.2,000, ஆண்களுக்கு இலவச பயணம்: EPS வாக்குறுதி
காளைகளை அடக்குங்க.. அரசு வேலையில் சேருங்க- ஜல்லிக்கட்டில் முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு
காளைகளை அடக்குங்க.. அரசு வேலையில் சேருங்க- ஜல்லிக்கட்டில் முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு
DMK CONGRESS TVK: தவெகவிற்கு பல்டியா.? டெல்லியில் திடீர் ட்விஸ்ட்- திமுகவிற்கு கெடு விதிக்க தயாராகும் ராகுல்.?
தவெகவிற்கு பல்டியா.? டெல்லியில் திடீர் ட்விஸ்ட்- திமுகவிற்கு கெடு விதிக்க தயாராகும் ராகுல்.?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Rs.2000 for TN Women: மகளிருக்கு ரூ.2,000, ஆண்களுக்கு இலவச பயணம்: EPS வாக்குறுதி
Rs.2000 for TN Women: மகளிருக்கு ரூ.2,000, ஆண்களுக்கு இலவச பயணம்: EPS வாக்குறுதி
காளைகளை அடக்குங்க.. அரசு வேலையில் சேருங்க- ஜல்லிக்கட்டில் முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு
காளைகளை அடக்குங்க.. அரசு வேலையில் சேருங்க- ஜல்லிக்கட்டில் முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு
DMK CONGRESS TVK: தவெகவிற்கு பல்டியா.? டெல்லியில் திடீர் ட்விஸ்ட்- திமுகவிற்கு கெடு விதிக்க தயாராகும் ராகுல்.?
தவெகவிற்கு பல்டியா.? டெல்லியில் திடீர் ட்விஸ்ட்- திமுகவிற்கு கெடு விதிக்க தயாராகும் ராகுல்.?
Gold And Silver Rate Today: மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.! ஒரே நாளில் ரூ.4000 உயர்வு- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.! ஒரே நாளில் ரூ.4000 உயர்வு- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
Chennai Power Cut: சென்னையில திங்கட்கிழமை(19.01.2026) எந்தெந்த ஏரியால பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னையில திங்கட்கிழமை(19.01.2026) எந்தெந்த ஏரியால பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Top 10 News Headlines: தங்கம், வெள்ளி விலை உயர்வு, MGR பிறந்த நாள்-மோடி பதிவு, ட்ரம்ப் வரி மிரட்டல் - 11 மணி செய்திகள்
தங்கம், வெள்ளி விலை உயர்வு, MGR பிறந்த நாள்-மோடி பதிவு, ட்ரம்ப் வரி மிரட்டல் - 11 மணி செய்திகள்
TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
Embed widget