![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tamilnadu Rain : தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![Tamilnadu Rain : தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல் Meteorological Department says Heavy rain likely in 16 districts in Tamil Nadu tomorrow Tamilnadu Rain : தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/30/365b93d789a60c2f39492b12345db0de_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு :
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 17, 2022
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
மே 19 வரை லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். அதேபோல், அந்தமான் ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்ககடலில் மணிக்கு 40- 50 கி.மீ வேகத்தில் காற்று வீச இருக்கிறது. எனவே இந்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி யின்னறுடன் கூடி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நிலகிரி) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வால்பாறை முதல் கனமழையும், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி தருமபுரி, கரூர், திருச்சி, வேலூர், திருப்புத்தார், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னதுடன் கூடிய வேமானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட உள்தமிழகம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு :
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 17, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)