Weather Update: கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை மையம் தகவல்!
Weather Forecast Today: "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது"

ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை முன்னெச்சரிக்கை
தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நாளை மறுநாள் வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் சென்னை புறநகர் நிலை என்ன ?
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
இன்று காலை 10 மணி முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் மிதமான மழை எச்சரிக்கை
இன்று காலை நிலவரப்படி 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிலை என்ன ? Kanchipuram Weather Forecast Today
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 10 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மாலை நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் மாலை நேரத்திலும் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




















