மேலும் அறிய

ஊராட்சி தலைவராகிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மனைவி!

மேல்மருவத்தூர் அடிகளார் மனைவி வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதால் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாகிறார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி துவங்கி 22ஆம் வரை நடைபெற்றது. ஊராட்சி தலைவராகிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மனைவி!
 
பொதுவாக ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் கட்சிகள் தங்களின் அடிமட்ட பலத்தை அதிகரிக்கும் வகையில் தனியாக நிற்பது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு ஊரிலும் புகழ்பெற்று விளங்கும் நபர்கள், பிரபலங்கள் தனித்து சுயேட்சையாக போட்டியிடுவதும் வழக்கம். அந்த வகையில் மேல்மருத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 
 
மேல்மருவத்தூர்
 
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். இங்குள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம்தான் இந்த ஊரின் அடையாளமாக தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள். அதிக வருமானம் உள்ளதால், ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எஸ்.இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன.
ஊராட்சி தலைவராகிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மனைவி!
 
இந்தக் கோயிலுக்கு குடியரசுத்தலைவர், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் , தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இக்கோவிலுக்கு வர தவறியது கிடையாது. இக்கோவிலை சுற்றி வட்டார ஊர்களில், உள்ள பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் ஆதிபராசக்தி புகைப்படத்தை தாராளமாக காணலாம்.   அதேபோல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மேல்மருவத்தூர் கோவிலை சார்ந்தவர்கள் இல்லாமல் நடைப்பெறுவது கிடையாது. அப்பகுதியில் பங்காரு அடிகளார் மற்றும் அவரது மகன்களான அன்பழகன் செந்தில் ஆகியோர் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
 
உள்ளாட்சித் தேர்தலில் போட்டி
 
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் மாற்று வேட்பாளராக பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக போட்டியிடும் லட்சுமி இதற்கு முன் 2  முறை மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 
ஊராட்சி தலைவராகிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மனைவி!
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்மருத்தூர் ஊராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தினால், போட்டியிட முடியாத சூழல் உருவானது. மீண்டும் இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக மாற்றி உள்ளதால், போட்டியிட வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்பு மனு மீதான பரிசீலனை நேற்றுடன் முடிவடைந்தது. இதில் லக்ஷ்மியின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது , இதைத்தொடர்ந்து போட்டி இன்று மூன்றாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
சொத்து மதிப்பு குழப்பம்
 
முன்னதாக கடந்த 16 ஆம் தேதி பங்காரு அடிகளாரின் மனைவி தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது மொத்த சொத்து மதிப்பு அசையும் சொத்துக்கள் -  75,149,141 , அசையா சொத்துக்களின் மதிப்பு - 160,280,003 , இதன் கூட்டுத்தொகை 23,54,29,144 வருகிறது.  ஆனால் வேட்பு மனுவில் ,  அதற்கு பதிலாக 253,54,29,144 என தவறாக குறிப்பிடப்பட்டது. இதன் காரணமாக சமூக வலைத்தளத்தில் 250 கோடி ரூபாய் சொத்து மதிப்பு என பரவத்துவங்கியது. இதுதொடர்பாக மேல்மருவத்தூர் வட்டாரங்கள் இச்செய்தியை மறுத்து வந்தனர்.ஊராட்சி தலைவராகிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மனைவி!
 
இதனைத் தொடர்ந்து 20 ஆம் தேதி லஷ்மி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். தனது அசையும் சொத்துக்களின் மதிப்பு 95,495,146 அசையா சொத்துக்களின் மதிப்பு 160,280,003 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தனது சொத்து மதிப்பு 25,57,75,149 எனக் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget