Threat To Actor Surya: சூர்யாவை எட்டி உதைத்தால், ஒரு லட்சம் பரிசு - பாமக மாவட்ட செயலாளரின் வன்முறை பேச்சு
படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் படத்தையும், படத்தில் பணியாற்றியவர்களையும் பாராட்டினர்.
ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜெய் பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் படத்தையும், படத்தில் பணியாற்றியவர்களையும் பாராட்டினர்.
இதற்கிடையே படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யா பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
எனினும், ஜெய் பீம் திரைப்படத்தை சுற்றியுள்ள சர்ச்சைகள் ஓயவில்லை. தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், “ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய சூர்யாவை இந்த பகுதியில் (மயிலாடுதுறையில்) நடமாடவிட மாட்டோம். இந்த பகுதியில் எந்த தியேட்டரிலும் அவரது படத்தை திரையிட விடமாட்டோம். இது தமிழ்நாட்டின் அனைத்து இடங்களில் நடைபெறும். இனி சூர்யா வான் மார்க்கமாகதான் தமிழ்நாட்டினுள் சுற்ற வேண்டும். தரை மார்க்கமாக போக முடியாது என்பதை எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறோம்”. பாமக மாவட்ட செயலாளரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வாசிக்க: Ajith whats app status | இதுதான் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்.. சோஷியல் மீடியாவில் ஷேர் செய்த வலிமை பட நடிகர்!
குழந்தைகள் தின ஸ்பெஷல் ! உங்கள் வீட்டு சுட்டிகளை மகிழ்விக்க வரும் டாப் 5 திரைப்படங்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்