மேலும் அறிய

Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!

திமுக அரசைப் போல வெற்று நாடகங்களை நடத்திக் கொண்டிருக்காமல், காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்வர் விஜய்க்கு வானதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குவதில் காட்டும் வேகத்தை தவெக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதில் காட்ட வேண்டும் என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் அம்மாநில அரசு மிக தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. முந்தைய அதிமுக, திமுக கடுமையாக எதிர்த்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 18ம் தேதி தொடங்கியது. 

இதனிடையே நேற்று (ஜூன் 19) முதலமைச்சர் விஜய் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவிக்க அவர் ஒருமனதாக நிறைவேறியது. 

வானதி சொன்னது என்ன?

இதனிடையே பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “சோனியா, ராகுல், கார்கேவை  சந்தித்து மேகதாதுவில் கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்டுவதை முதலமைச்சர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குவதில் காட்டும் வேகத்தை இதில் காட்ட வேண்டுமெனவும் முதலமைச்சர் விஜயை விளாசியிருந்தார். 

கடந்த கால திமுக அரசைப் போல வெற்று நாடகங்களை நடத்திக் கொண்டிருக்காமல், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மாறாக திமுகவைப் போல கர்நாடக காங்கிரஸ் அரசிடம் மென்மையான போக்கை கையாண்டால் வரலாறு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை ஒருபோதும் மன்னிக்காது” என கூறியிருந்தார்.

Also Read: TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?

மாணிக்கம் தாகூர் பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், “மேகதாது விவகாரத்தில் காங்கிரஸை கேள்வி கேட்பவர்கள் முதலில் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.கர்நாடக பாஜக தலைவர்கள் தொடர்ந்து மேகதாது அணைக்கு ஆதரவாக பேசும்போது, பிரதமர் மோடி, அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோர் ஏன் அவர்களை தடுக்கவில்லை? ஏன் ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை?தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் சமரசம் செய்யாது.மக்களின் நலன்தான் எங்களுக்கு முதன்மை. மேகதாது விவகாரத்திலும் அதே நிலைப்பாடுதான். விலைக்கு எம்எல்ஏக்களையும், எம்பிக்களையும் வாங்குவது பாஜகவின் பிறப்புரிமை என்று நம்புபவர்களுக்கு எல்லாமே அதே கண்ணோட்டத்தில்தான் தெரியும்” என தெரிவித்துள்ளார்.  

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
மருத்துவமனையா... எலி பொந்தா?” குழந்தையை பாதுகாப்பதா? தூங்குவதா? - மகப்பேறு வார்டில் அலறும் தாய்மார்கள்
மருத்துவமனையா... எலி பொந்தா?” குழந்தையை பாதுகாப்பதா? தூங்குவதா? - மகப்பேறு வார்டில் அலறும் தாய்மார்கள்
"தாய் மாமன் விஜய் என்ன சொல்லப்போறாரு?" - 19 வயது இளைஞர் படுகொலையால் கொந்தளித்த சீமான்
வானிலை வார்னிங்: சென்னையில் இன்று இடியுடன் மழை; நீலகிரி, தேனிக்கு 2 நாட்கள் கனமழை
வானிலை வார்னிங்: சென்னையில் இன்று இடியுடன் மழை; நீலகிரி, தேனிக்கு 2 நாட்கள் கனமழை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget