ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மைலேஜ் அதிகரிக்க என்ன செய்யலாம்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இந்திய ஆட்டோ சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்று

ஹீரோ நிறுவனம் அவ்வப்போது ஸ்பிளெண்டர் புதிய மாடல்களை சந்தையில் வெளியிட்டு வருகிறது

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக் 9.8 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு கொண்ட டேங்குடன் வருகிறது

சில எளிய வழிமுறைகள் மூலம் இதன் மைலேஜ் அளவை அதிகரிக்கலாம்.

காற்றழுத்தம் குறைவாக உள்ள டயர்கள் உருளும் எதிர்ப்பை அதிகரிப்பதால் மைலேஜ் குறையும். அதனை சரியாக வைக்கவும்

சீரான வேகத்தைப் பராமரிக்க வேண்டும். அதிவேகமாக ஓட்டுவதையும், திடீர் திடீரென பிரேக் பிடிப்பதையும் குறைக்கவும்

பைக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும்.

கார்புரேட்டர் சரியாகச் சரிசெய்யப்பட்டிருப்பதையும், ஸ்பார்க் பிளக்குகள் நல்ல நிலையில் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வாகனம் ஓட்டும்போது கிளட்சை பிடித்தபடி இருப்பதை தவிர்க்கவும்