Sylendra Babu: அடுத்தடுத்து லாக் அப் டெத்.. இரவு நேர விசாரணைக்குத் தடை.. அதிரடி உத்தரவிட்ட டிஜிபி..!
சென்னை, திருவண்ணாமலையில் விசாரணை கைதிகள் மரணமடைந்ததையடுத்து இரவில் விசாரணை நடத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, திருவண்ணாமலையில் விசாரணை கைதிகள் மரணமடைந்ததையடுத்து இரவில் விசாரணை நடத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சைலேந்திரபாபு பேசும் போது, “ தொடர்ந்து விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே இவற்றை தடுக்க குற்றவாளிகளை கைது செய்த உடனே நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவிட வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும். விசாரணை கைதிகளை இரவு நேரத்தில் காவல்நிலையத்தில் வைக்கக் கூடாது.” என்று பேசியுள்ளார்.
View this post on Instagram
கடந்த ஆண்டு சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்திலேயே உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அந்த வழக்குத் தொடர்பான விசாரணை தற்போது நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் அண்மையில் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாக எதிர்கட்சிகள் உட்பட பலர் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்த நிலையிதான் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்