முதல்வர் ரங்கசாமியை தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளது மோடி அரசு - கார்கே
பாஜக கொள்கையை ஏற்காதவர்களை மிரட்டி தொல்லை கொடுத்து அடிபணிய வைத்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பார்த்து பரிதாப்படுகிறேன். அவரையும் செயல்படவில்லை. செயல்படுத்த விடாமல் மோடி அரசு கைக்குள் போட்டுகொண்டு அவரை தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே புதுச்சேரியில் தெரிவித்தார். மோடி கேரண்டி மக்களிடத்தில் எடுபடவில்லை. அது ஒரு பொய்யான கேரண்டி என்றார்.
தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில், இந்திய கூட்டணிகள் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே புதுச்சேரியில் நடைபெற்ற, தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநில அந்தஸ்து
கூட்டத்தில் இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே பேசுகையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரை அமலாக்கத்துறை எந்த அளவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளது என பொன்முடியை பற்றி பேசினார். நாம் ஒருங்கிணைந்து நாட்டின் வளர்ச்சி மற்றும் புதுச்சேரி முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம். புதுச்சேரி மாநில கலாச்சாரம், மக்களின் பழக்க வழக்கங்கள் பெருமை சேர்க்க கூடியவை. மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசானது புதுச்சேரிக்கு யூனியன் பிரதேசத்திற்கான அந்தஸ்தை வழங்கியது. நாம் முழுமையாக அந்த சுதந்திரத்தை அடைந்துவிட்டோமா என்று தெரியவில்லை. புதுச்சேரி முழுமையாக மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமாக மாற வேண்டும். காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது மாநில அந்தஸ்து பெற்றுதர பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி.
மோடி அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் ஒன்றை கூட செயல்படுத்தவில்லை. காங்கிரஸ் செயல்படுத்தியுள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம் என ஒரு வரியில் கூட குறிப்பிடவில்லை. இது ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மக்களை புறக்கணிப்பது என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் மாநில அந்தஸ்து பெற்று தருவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மட்டுமல்லாது புதுச்சேரியில் உள்ள மூடப்பட்டுள்ள ஆலைகள், ரேஷன்கடைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து வேலை கொடுப்போம்.
குறுக்கு வழியில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கின்றனர்
காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டது. தமிழக அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையை வைத்து பாஜக அரசு எந்த விசாரணையும் செய்யாமல் கைது செய்தனர். எந்த விதிமுறையும் கடைபிடிக்காமல் தொல்லை கொடுத்தனர். அப்போதே மோடி அரசை சாடியிருந்தேன். மோடி அரசு குறுக்கு வழியில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கின்றனர். பாஜக கொள்கையை ஏற்காதவர்களை மிரட்டி தொல்லை கொடுத்து அடிபணிய வைத்துள்ளது.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை வைத்து காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்தார்களோ அதே போல் தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு அங்குள்ள ஆளுநர் ரவியை வைத்து தொல்லை கொடுக்கின்றனர். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை முடக்கும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பார்த்து பரிதாப்படுகிறேன்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பார்த்து பரிதாப்படுகிறேன். அவரையும் செயல்படவில்லை. செயல்படுத்த விடாமல் மோடி அரசு கைக்குள் போட்டுகொண்டு அவரை தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளனர். மோடி அவர்கள் சோனியாகாந்தி, கார்கே ஆகியோரை அழைப்பு விடுத்திருந்தேன் அவர்கள் வரவில்லை ராமரை மதிக்கவில்லை என கூறி திசை திருப்பி இருந்தார். காங்கிரஸ் கட்சி தலைவராக இவர்களை அழைக்கவில்லை.
பிரதமர் பொய் கூறுகிறார்
மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் 155 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்கியுள்ளார். இவர்களது ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மோடி பிரதமர் ஆனதும் வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து அதில் இருந்து 15 லட்சம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் என்றார். இதுவரை யாருக்காவது வந்ததா? 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். ஆனால் கொடுக கவில்லை. பிரதமர் பொய் கூறுகிறார். மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர் என தெரிகிறது. மோடி இருந்தால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை தான் செயல்படுத்தி வருகிறார்.
மோடியும், அமித்ஷாவும் மிகப்பெரிய வாஷிங்மெஷின்
காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்ததும் நிறப்பப்படாமல் உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகளை ஒரு வருடத்தில் நிரப்புவோம். குடும்ப தலைவி பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் மகளிர் உரிமை தொகை கொடுப்போம். மோடி கேரண்டி மக்களிடத்தில் எடுபடவில்லை. அது ஒரு பொய்யான கேரண்டி. மோடியும், அமித்ஷாவும் மிகப்பெரிய வாஷிங்மெஷின். அவர்களுக்கு அடிபணிந்தவர்களை வாஷிங்மெஷின் மூலம் சுத்தமா துடைத்துவிடுகின்றனர்” என்றார்.