மேலும் அறிய

MRI இயந்திரம் கொள்முதலில் வருவாய் இழப்பும் புறக்கணிப்பும்... முதல்வர் விஜய்க்கு பறந்த கோரிக்கை!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 29 எம்.ஆர்.ஐ  இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு என்னதான் அதிக பணம் செலவழிக்க முன்வந்தாலும் வெளியில் கொள்முதல் செய்யப்படும் இயந்திரம் தரம் குறைந்தவையாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் எம்.ஆர்.ஐ. இயந்திரங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் நிலையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்  அதிக விலையில் இயந்திரங்கள் வாங்கும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

புறக்கணிக்கப்படும் மேக் இன் இந்தியா உற்பத்தியாளர்கள்

தமிழ்நாட்டில் புதிதாக தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ளது. தமிழ்நாட்டின் நிதிச்சுமையை கருத்தில்கொண்டு பல்வேறு விதமான நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. இப்படியான நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 29 எம்.ஆர்.ஐ  இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரும்  தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் விடப்பட்டுள்ளது. 

இந்த டெண்டருக்காக சமர்பிக்கப்பட்ட நிறுவனங்களின் அறிக்கையை ஆய்வு செய்ததில் அதில் கொள்முதல் விலையில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ்நாடு அரசு ஒரு இயந்திரத்திற்கு ரூ.7 கோடி முதல் ரூ.15 கோடி வரை செலவு செய்ய தயாராக உள்ளது. ஆனால் அதைவிட மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட CDSCO அங்கீகாரம் பெற்ற 1.5T எம்.ஆர்.ஐ இயந்திரங்கள் இந்தியாவில் 5 கோடி ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையில் வணிகரீதியாக கிடைப்பதாக சொல்லப்படுகிறது. 

தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு தவிர்ப்பு

அரசு என்னதான் அதிக பணம் செலவழிக்க முன்வந்தாலும் அவை தொழில்நுட்ப ரீதியாகத் தரம் குறைந்த இயந்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்த எம்.ஆர்.ஐ இயந்திரம் வாங்கினால் தமிழக அரசுக்கு ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும் என மருத்துவத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

அதுமட்டுமல்லாமல் இந்த இயந்திரங்களை கொள்முதல் செய்ய வெளியிடப்பட்டுள்ள டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், இந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களை விற்பனை செய்தவர் பெயர் மட்டுமே ஒப்பந்தத்தில் இடம்பெறும், ஆனால் இந்த இயந்திரம் தொடர்பான எந்தவொரு தகவல்களும் இருக்காது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 
இது தேசிய பாதுகாப்பு  மற்றும் தரவு இறையாண்மை தொடர்பான கவலைகளை எழுப்பும் வகையில் அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு 

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்  இதுபோன்ற மருத்துவ உபகரணங்களுக்கான டெண்டரில் மேக் இன் இந்தியாவின் கீழ் வரும் உற்பத்தியாளர்களை புறக்கணிப்பது இது முதல்முறையல்ல. முன்னதாக சி.டி.ஸ்கேனர் உற்பத்தியாளர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், அதுதொடர்பான டெண்டருக்கு 2026 ஜூன் 30 வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. 

அதேசமயம் மேக் இன் இந்தியா திட்டம் கீழ் செயல்படும் உற்பத்தியாளர்கள் மாநில அரசின் அனைத்து விதமான டெண்டரிலும் பங்கேற்கலாம் என்பது விதிமுறையாக உள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களுக்கு முன்னுரிமை அளித்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விதிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. 

Also Read: Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!

ஏற்கனவே சி.டி.ஸ்கேனர் விவகாரத்தில் இந்த விதிமுறை பின்பற்றப்பட்டாதது தான் அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. தற்போது MRI டெண்டர் விவகாரத்திலும்  தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இதுபோன்று செயல்படுவது மிகப்பெரிய அளவில் கேள்விகளையும், சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget