ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.... மலம் கழிப்பவர்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா... வைரலாகும் பேனர்!
தற்போது மதுரையில் பெருமாள் தெப்பம் சிறு வியாபாரிகள் நலச்சங்கம், கோயில் பகுதியில் அத்துமீறி நடப்போரை கண்காணிப்பது தொடர்பாக பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.
நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது.
இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது. சிசிடிவி கேமராவால் கொலை மற்றும் கொள்ளைக்கான ஆதரங்கள் கிடைக்கின்றன. இப்படி பல வகைக்கு சிசிடிவி கேமராவை தேவையில்லாத சில விஷயத்திற்கும் வைக்கும்படியான சூழ்நிலை அமைந்து விடுகிறது சில நேரங்களில். ஆம், மதுரையில் வைக்கப்பட்ட பேனர் ஒன்றில் இடம்பெற்ற வார்த்தைகள் பொதுமக்கள் சிரிக்கும் அளவிற்கு வந்துள்ளது.
பொதுஇடத்தில் சிறுநீர், மலம் கழிக்க வேண்டாம் என்று பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது நாம் பார்த்திருப்போம். ஆனால், எவ்வளவு கூறினாலும் அதை மீறியும் சிலர் அம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதெல்லாம் ‘ ஐ டோண்ட் கேர்’ என்ற மோடில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட பல வேலைகளை செய்து வருகின்றனர். முக்கியமாக கோயில்கள், பள்ளிகள் இருக்கும் இடத்தில் இதுபோன்ற செயல்கள் அதிகமாகி வருகின்றன.
தற்போது மதுரையில் பெருமாள் தெப்பம் சிறு வியாபாரிகள் நலச்சங்கம், கோயில் பகுதியில் அத்துமீறி நடப்போரை கண்காணிப்பது தொடர்பாக பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.
அந்த பேனரில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த திருக்கோயில் பகுதியில் மது அருந்துவோர், மலம் கழிப்போர், குப்பை போடுபவர் CCTV கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறீர்கள் இந்த தவறில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதப்பட்டுள்ளது.
இதைப்பார்த்த சிலர், அந்தப் பேனரை புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மலம் கழிப்போரை சிசிடிவி கேமரா கண்காணிக்கும் என்னடா இது என்று கேட்க, ஒரு சிலர் இப்படி வைத்தால் ஆவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் அதனை செய்யாமல் இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். பேனரில் சில வார்த்தைகள் தவறாக எழுதியுள்ளதாகவும், மதுரை டவுன் ஹால் பகுதியில் தமிழை வாழ வைக்கும் தமிழர்கள் என்றும் சிலர் கிண்டல் செய்துள்ளனர். இந்த பேனர் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்