மேலும் அறிய
மதுரையில் நாளை பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் திறப்பு: தோனி வருகை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
திண்டுக்கல், நெல்லை போல் மதுரையிலும் இனி கிரிக்கெட் மேட்ச் பார்க்கமுடியும். வருங்காலங்களில் இதே மைதானம் சேப்பாக்கத்தை போல் உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது. - எனவும் தெரிவித்தனர்.

மதுரை கிரிக்கெட் மைதானம்
Source : whatsapp
மதுரையில் நாளை கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட உள்ளது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு வழிகாட்டுதலின்படி பார்வையாளர்கள் இன்றி திறக்கப்படும் வேலம்மாள் கிரிக்கெட் மைதானம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான தோனி நாளை திறந்து வைக்கிறார்
மதுரை வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் 12.5 ஏக்கரில் சுமார் ரூபாய் 360 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள கிரிக்கெட் வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான தோனி நாளை திறந்து வைக்கிறார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு வழிகாட்டுதலின்படி பார்வையாளர்கள் இன்றி திறக்கப்படும் வேலம்மாள் கிரிக்கெட் மைதானம்.
பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
முப்பதாயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் இயற்கை வசதி உள்ளது நவீன தொழில்நுட்பத்துடன் பகல் இரவு ஆட்டத்திற்கான மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வருகையால் ரசிகர்கள் திரள்வார்கள் என்ற காரணத்தினால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரைக்கு வந்தது மகிழ்ச்சி
இது குறித்து மதுரை கிரிக்கெட் ரசிகர்கள் கூறும்போது..,” தமிழ்நாட்டில் சேப்பாக்கத்திற்கு அடுத்தபடியாக இந்த மைதானம் பெரிய மைதானமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜிம், ஓய்வுஅறை, மருத்துவ வசதி, தண்ணீரை உள்வாங்கும் வசதி, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இடங்கள் என ஏராளமான வசதிகள் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. திண்டுக்கல், நெல்லை போல் மதுரையிலும் இனி கிரிக்கெட் மேட்ச் பார்க்கமுடியும். வருங்காலங்களில் இதே மைதானம் சேப்பாக்கத்தை போல் உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது டி.என்.பி.எல்., போன்ற மேட்ச்சுகள் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். தல தோனியை பார்க்க மைதானத்தில் பிற ஆட்களுக்கு அனுமதி இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது” எனவும் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
கிரிக்கெட்
கிரிக்கெட்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement






















