கட்சிகளுக்கு செக்! அரசியல், சாதி அடிப்படையில் கட்சிக் கொடிக்கம்பங்கள்! நீதிமன்றம் போட்ட காட்டமான உத்தரவு
தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடி கம்பங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடி கம்பங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கொடி கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அதிகாரிகள் 2 வாரம் கால அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
தேசிய மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க இனி அனுமதி தரக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கட்சிக் கொடி கம்பங்கள் நடுவதால் மோதல்கள் உருவாகி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது என நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு அதிக உயரங்களில் கட்சி கொடி கம்பங்கள் அமைப்பது ஏற்கத்தக்கது அல்ல எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
அரசியல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், தர்ணா, மாநாடு உள்ளிட்டவைகளுக்கு உரிய அனுமதி பெற்று தற்காலிக கொடிக்கம்பங்கள் வைக்கலாம் எனவும் காலக்கெடு முடிந்த பின்னர், குறிப்பிட்ட கால அளவில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவுகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி உத்தரவை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமைச் செயலாளர் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது தொடர்பான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

