மேலும் அறிய
Advertisement
ஈபிஎஸ் vs ஓபிஎஸ்... அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு...!
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கை வரும் 10ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கை வரும் 10ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில், தனக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்ததால், அது தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த செயல் நீதித்துறையை களங்கப்படுத்துவது என பன்னீர்செல்வம் தரப்புக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதியிடம் முறையிட்டதற்கு மன்னிப்பு கோரிய பன்னீர்செல்வம் தரப்பில், ஏற்கனவே இரு முறை இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து தீர்ப்பளித்துள்ளதால் மற்றொரு நீதிபதி புதிதாக விசாரணை நடத்துவதே முறையாக இருக்கும் எனவும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை எனக் கூறி, தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்று மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், எந்த நீதிபதி முன்பும் வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த இந்த மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஏற்கனவே இரண்டு முறை இந்த விவகாரத்தை விசாரித்து, கருத்தை வெளிப்படுத்தி, உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாக மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின்படி, இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு வைப்பதே பொருத்தமானது எனக் கருதுவதால், இந்த வழக்குகளை புதிதாக விசாரிக்க நீதிபதியை நியமிக்கும் வகையில் வழக்குகளை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்கும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு நிதிபதி ஜெயசந்திரன் முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, பன்னீர்செல்வம் தரப்பில், டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கை நாளை மறுதினம் தள்ளிவைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வருகின்ற புதன்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion