மேலும் அறிய

மருத்துவப் படிப்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு... அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பது குறித்து மறு ஆய்வு செய்யலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சென்னை மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பது குறித்து மறு ஆய்வு செய்யலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

தனியார் தொழிற்சாலையில் இரவு காவலாளியாக இருப்பவரின் மகள் வர்ஷா, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மருத்துவப் படிப்பு ஆசையில் இருந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் துணை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்.

’கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி’ என்கிற என்ற படிப்பை படித்துக் கொண்டே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி  210, 250 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால், தமிழ்நாடு அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழும் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் 7.5 % ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகளுக்கும் வழங்கி இருந்தால் தனக்கும் மருத்துவ இடம் கிடைத்திருக்கும் என்றும், தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கும் அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு அரசிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசிடம் அளித்த மனுவை பரிசீலித்து மருத்துவப் படிப்பில் தனக்கு ஒரு இடத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

 இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார், அரசு கூடுதல் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி, தனியார் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய மனுக்களையும், இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதன்பின்னர் நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், ”அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை  இரு நீதிபதிகள் அமர்வு நிராகரித்த நிலையில்,  மீண்டும் அதே நிவாரணத்தை கோர முடியாது” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசுதான் நிதி உதவி செய்கிறது என்பதாலும், அங்கு படிக்கும் மாணவர்களும் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்களின் பொருளாதார சமூக நிலை என்பது அரசு பள்ளி மாணவர்களை போன்று தான் உள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிபதி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு மறு ஆய்வு செய்யலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

இது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இருந்தாலும் அரசின் கொள்கை முடிவுக்கு சமத்தப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Embed widget