டிரெண்டாகும் #அன்றே சொன்ன ரஜினி : அப்படி என்ன தான் சொன்னாரு ரஜினி?
டிவிட்டரில் #அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் உருவாக்கினர். அந்த ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியதை தொடர்ந்து, அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடு என்றும் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதையடுத்து, தனது நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் இயக்கம் என்று மாற்றினார். அதனைத்தொடர்ந்து, பல நிகழ்ச்சிகளில் அரசியல் தொடர்பாக ரஜினி பேசியது, பெரும் பேசு பொருளானது. தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவம், மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ சட்டத்துக்கு ஆதரவு, பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு, தமிழ் கடவுள் முருகனுக்கு எதிராக கூறிய கருத்துக்கு கொதித்தெழுந்து ட்வீட் செய்தது என தனது கருத்துகளை சொல்லி வந்தார். இதனிடையே, படங்களிலும் நடித்து வந்து ரசிகர்களை மகிழ்விக்கவும் செய்தார்.
இப்படி சென்றுக் கொண்டிருக்கையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு, நாட்டையே கதிகலங்கச் செய்தது. இந்நிலையில், தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கட்சி தொடங்கப்போவதில்லை ரஜினி வெளியிட்டதாக அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, ரஜினிகாந்த், அந்த அறிக்கை தனது இல்லை என்றும், ஆனால், அதில் இடம்பெற்ற உடல்நலம் குறித்த தகவல் உண்மை என்றும் ட்வீட் செய்தார். இதன்பிறகு, ரஜினி கட்சி தொடங்குவாரா..? மாட்டாரா..? என்று பலரும் சந்தேகம் அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகும் நிச்சயம். அற்புதம்.. அதிசயம்.. நிகழும்’ எனப் பதிவிட்டார். இதன்மூலம், ரஜினியின் அரசியல் வருகை உறுதியானது. எதிர்க்கட்சிகளுக்கும் பீதியானது.
இதையடுத்து, ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினிக்கு ரத்த கொதிப்பு ஏற்பட்டு, அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், டிசம்பர் 29ஆம் ஒரு பெரிய நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மேலும், அந்த அறிக்கையில், இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ரஜினியின் இந்த முடிவை சிலர் ஏற்றுக்கொண்டனர். அவரின் ரசிகர்களே சிலர் எதிர்ப்பு தெரிவிப்பு தெரிவித்தனர். அவருக்கு அரசியலுக்கு வர வேண்டும் வள்ளூவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டமும் செய்தனர். ஆனால், ரஜினி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறி விட்டு, தனது வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என்றும், தொற்று அதிகரிக்க பரப்புரையே காரணம் என்றும், பரப்புரையின்போது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் தவறவிட்டதாகவும் சென்னை உயர்நீதி மன்றம் கடுமையாக குற்றம்சாட்டியது.
இதையடுத்து, டிவிட்டரில் #அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் உருவாக்கினர். அந்த ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

#Thalaivar #superstarrajinikanth#Superstar @rajinikanth#அன்றே_சொன்ன_ரஜினி @V4umedia_ pic.twitter.com/6BdpOH7Q9E
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 26, 2021

Sensible decision by #Thalaivar #Rajinikanth 🙏💯❤️

#அன்றே_சொன்ன_ரஜினி pic.twitter.com/9ZvH4GutEY
— Jeeva Thangavel (@jeeva_actor) April 26, 2021

பேசும் படம் #அன்றே_சொன்ன_ரஜினி @rajinikanth pic.twitter.com/ioHcOGO9cY
— Rajinikanth Fans (@RajiniFC) April 26, 2021

மேலும், அந்த ஹேஷ்டேக்கின் கீழ், ரஜினி அறிக்கையில் குறிப்பிட்ட கடைசி பத்தியை மட்டும் எடுத்து ஷேர் செய்து வருகின்றனர்.