GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: சென்னையில் வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
GAS Cylinder: சென்னையில் வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்ந்ததால், உணவகங்களில் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் விலை உயர்வு
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயண்பாட்டிகான 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை 16 ரூபாய் அதிகரித்து, ஆயிரத்து 980 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. முன்னதாக சென்னையில் கடந்த மாதம் வணிக சிலிண்டரின் விலை, ஆயிரத்து 964 ரூபாய் 50 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜுலை மாதம் முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பருவமழை தமிழக மக்களை வாட்ட் வதைத்து வரும் நிலையில், இந்த விலைவாசி உயர்வு வியாபாரிகளுக்கு தொடர்ந்து பேரிடியாக உள்ளது.
அதேநேரம், 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக தொடர்கிறது. இது தாய்மார்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.