முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எளிதான டிப்ஸ்.. முதலில் வெந்நீரில் முகத்திற்கு ஆவி பிடித்துக் கொள்ளவும். சூடான நீரில் துணியை நனைத்து அதை முகத்தில் ஒத்தடம் கொடுத்து எடுக்கலாம். சர்க்கரை, தேன், மஞ்சள் அவற்றை சேர்த்து ஸ்க்ரப் செய்து நீக்கலாம். சிட்ரிக் ஆசிட் கரும்புள்ளிகளை குறைக்க உதவும். முல்தானி மட்டி , அரிசிமாவு, ரோஸ் வாட்டர் மூன்றையும் சேர்த்து ஸ்க்ரப் பேக் ஆக பயன்படுத்தலாம். ஜில்லென்ற தண்ணீரில் (ஐஸ் வாட்டர்) அடிக்கடி முகம் கழுவலாம். எண்ணெய் பசை கொண்ட சருமம் என்றால் கூடுதல் பராமரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். இரவு தூங்குவதற்கு முன் டோனர் பயன்படுத்துவது உதவும். கற்றாழை ஜெல் பயன்படுத்துவது உதவும்.