TN RAIN: உஷார்.. இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை?
வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்தும் கடந்த பின்பும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் சென்னையில் இருந்து தென்கிழக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் நிலையில், நாளை சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இருதினங்களுக்கு முன்பு உருவான வளிமண்டல சுழற்சியானது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடலோர பகுதிகளை நெருங்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Depression over Eastcentral and adjoining Southeast Arabian Sea lay centered at 2330 hrs IST of yesterday, the 14th December 2022 near latitude 13.80N and longitude 68.70E about 530 km northwest of Aminidivi (Lakshadweep), about 580 km west-southwest of Panjim (Goa). pic.twitter.com/dCKrmvSmj3
— India Meteorological Department (@Indiametdept) December 14, 2022
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:
தற்போது கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, லட்சதீவிற்கு வடமேற்கே 530 கிலோ மீட்டர் தொலைவிலும், கோவாவின் பான்ஜிம் பகுதியிலிருந்து மேற்கு - தென் மேற்கு பகுதியில் 580 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..?
இதனிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
15.12.2022 முதல் 17.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19,12.20221 தமிழ்நாடு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-11 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23.24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
15.12.2022: மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16.12.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17.12.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18.12.2022: மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.