மேலும் அறிய

CAG Report | அதிமுக ஆட்சியில், நிலக்கரி தரம் குறைவால் இத்தனை கோடி இழப்பு : சிஏஜி அறிக்கை சொல்வது என்ன?

கடந்த 2013 முதல் 2018ம் ஆண்டு வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்த காரணத்தால் ரூபாய் 13 ஆயிரத்து 176 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, கலைவாணர் அரங்கில் கடந்த 21-ந் தேதி தொடங்கிய சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது,

“ அ.தி.மு.க. ஆட்சியில் 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்த காரணமாக ரூபாய் 13 ஆயிரத்து 176 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய மின் உற்பத்தி திட்டங்களில்  ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக டான்ஜெட்கோவிற்கு கூடுதல் செலவாக ரூபாய் 2 ஆயிரத்து 381 கோடி ஏற்பட்டுள்ளது, உரிய காலத்தில் திட்டம் நிறைவேறாததால் பற்றாக்குறையை சமாளிக்க மின்சாரம் வாங்கியதில் கூடுதல் செலவாக ரூபாய் 2 ஆயிரத்து 99 கோடியே 48 லட்சம் ஏற்பட்டுள்ளது.

தகுதி அடிப்படையில் கடைநிலையில் இருந்து மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்த மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூபாய் 493.74 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. குறைந்த விலையில் பெற வேண்டிய மின்சாரத்தை பெறாமல் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் டான்ஜெட்கோவுக்கு ரூபாய் 349.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்புக்கொண்ட அளவில் மின்சாரத்தை வாங்காததால் டான்ஜெட்கோ கூடுதலாக அளித்த தொகை ரூபாய் 122.8 கோடியாக உள்ளது.

CAG Report | அதிமுக ஆட்சியில், நிலக்கரி தரம் குறைவால் இத்தனை கோடி இழப்பு : சிஏஜி அறிக்கை சொல்வது என்ன?

மின்கொள்முதல் ஒப்பந்தங்களை முறையாக புதுப்பிக்காததால் ஏற்பட்ட நஷ்டம் ரூபாய் 39.48 கோடி ஆகும். சூரிய ஒளி மின்திட்டங்களை தொடங்காத நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் டான்ஜெட்கோவிற்கு ரூபாய் 605.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்டகால ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு குறுகிய கால ஒப்பந்தம் செய்ததால் ரூபாய் 93.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2015-18ம் ஆண்டில் அதிக விலையில் மின்சாரம் வாங்கியதில் டான்ஜெட்கோவிற்கு ரூபாய் 544.44 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தை பெறாமல் உள்ளூரில் மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூபாய் ஆயிரத்து 55.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் ரூபாய் 712 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்திற்கு வந்து சேராத மின்சாரத்திற்கு பணம் கொடுத்த வகையில் ரூபாய் 242.9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி விலை 2014-19ம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தி செலவில் 95.54 சதவீதம் முதல் 98.41 சதவீமாக இருந்தது. இது நுகர்வோர் மீதான மின்கட்டணத்தில் குறிப்பிடத்தக்கத்தை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான எஸ்.எச்.ஆர். அனைத்து டி.பி.எஸ்.சிலும் டி.என்.இ.ஆர்.சி. விதித்த விதிமுறைக்கு அதிகமாக இருந்தது.

CAG Report | அதிமுக ஆட்சியில், நிலக்கரி தரம் குறைவால் இத்தனை கோடி இழப்பு : சிஏஜி அறிக்கை சொல்வது என்ன?

இதன் விளைவாக மெட்ரிக் டன் நிலக்கரி அதிகப்படியான நுகர்வு 2014-19 ஆண்டு முழுவதும் ரூபாய் 2 ஆயிரத்து 317.46 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், அனைத்து டி.பி.எஸ்சிலும் அதிக கலோரி மதிப்பைக் கொண்ட இறக்குமதி செயயப்பட்ட நிலக்கரியின் அதிக விகிதத்தை பயன்படுத்தினாலும் டான்ஜெட்கோவால் குறிப்பிட்ட நிலக்கரி நுகர்வை குறைக்க முடியவில்லை.

ரசீது கிடைத்த உடனே பயன்பாட்டின்போது நிலக்கிரியன் மொத்த கலோரி மதிப்பு குறைவதற்கான காரணத்தை பகுப்பாய்வு செய்ய டான்ஜெட்கோ தவறிவிட்டது. சுரங்கங்களில் இருந்து வெளியேற்றும் துறைமுகங்களுக்கான போக்குவரத்தின் போது கலோரிபிக் மதிப்பின் உண்மையான இழப்பு ஒரு கிலோவிற்கு 140 முதல் 2 ஆயிரத்து 256 கிலோ கலோரி வரை இருக்கும். இதன் விளைவாக ரூபாய் 2,012.65 கோடி வீண் செலவாகியுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சட்ட வழக்கை மேற்கோள் காட்டி டான்ஜெட்கோ போக்குவரத்து இழப்தை தீர்மானிக்கவில்லை. 2014-19ம் ஆண்டில் நிலக்கிரியன் தரம் குறைவாக இருந்ததால், 171.57 கோடி ரூபாய் மதிப்புள்ள 844 மில்லியன் யூனிட் உற்பத்தி இழப்பை டான்ஜெட்கோ சந்தித்துள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறை  அமைச்சராக தங்கமணி பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget