Lok Sabha Election Celebrity Candidate: மக்களவை தேர்தல் 2024: கங்கனா ரணாவத் முதல் ராதிகா சரத்குமார் வரை.. களம் காணும் சினிமா நட்சத்திரங்கள்..
Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இம்முறை களம் கண்டுள்ள சினிமா நட்சத்திரங்கள் பட்டியலை காணலாம்.
நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 முதல் எண்ணப்பட்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் களம் கண்டுள்ளனர். சினிமாவை தாண்டி அரசியலில் அவர்களின் கொள்கைகள் அடிப்படையில் கட்சிகள் தரப்பில் அவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்ட சினிமா நட்சத்திரங்களின் பட்டியலை பார்க்கலாம்.
கங்கனா ரணாவத்:
வெளிப்படையாக பேசும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தனது சொந்த ஊரான ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டியில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் போட்டியிடுகிறார். 6 முறை முன்னாள் முதல்வராக இருந்த வீரபத்ர சிங்கின் மகனும், மண்டி எம்பியுமான பிரதிபா சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங்கை (காங்கிரஸ் வேட்பாளர்) எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். ஆனால்
மனோஜ் திவாரி:
அரசியல்வாதி, பாடகர் மற்றும் நடிகரா மனோஜ் திவாரி வடகிழக்கு டெல்லி மக்களவையில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (ஜேஎன்யுஎஸ்யு) முன்னாள் தலைவரும், காங்கிரஸின் கன்னையா குமார் கடும் போட்டியிட்டுள்ளார்.
சத்ருகன் சின்ஹா & பவன் சிங்:
மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோல் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த நடிகர் சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார். அவர் சுயேட்சையாகப் போட்டியிட்ட போஜ்புரி நடிகரும் பாடகருமான பவன் சிங்கை எதிர்த்து களம் கண்டுள்ளார். சத்ருகன் சின்ஹா, அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில், கப்பல் மற்றும் சுகாதாரத் துறைகளைக் கொண்ட முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேம மாலினி:
பிரபல நடிகையும், நாடாளுமன்ற எம்பியுமான ஹேம மாலினி மீண்டும் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். 2019 ஆம ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதுரா தொகுதியில் ஹேம மாலினி 6,71,293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல், 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மதுராவில் ஹேம மாலினி தீர்க்கமான வெற்றியைப் பெற்றார். அவர் RLD வேட்பாளர் ஜெயந்த் சவுத்ரியை 3,30,743 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இம்முறை அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முகேஷ் தங்கர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சுரேஷ் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அருண் கோவில்:
‘ராமாயணம்’ என்ற தொலைக்காட்சி தொடரில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அருண் கோவில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக தேவ்ரத் குமார் தியாகி (பிஎஸ்பி) மற்றும் சுனிதா வர்மா (எஸ்பி) போட்டியிடுகின்றனர்.
ரவி கிஷன்:
போஜ்புரி நடிகர் ரவி கிஷன் கோரக்பூரில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி சார்பில் காஜல் நிஷாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜாவேத் அஷ்ரஃப் போட்டியிடுகின்றனர். 2019 மக்களவைத் தேர்தலில், கோரக்பூரில் இருந்து சமாஜ்வாதி கட்சி (SP) வேட்பாளர் ராம்புவால் நிஷாத்தை எதிர்த்து ரவி கிஷன் 3,01,664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினேஷ் லால் யாதவ்:
போஜ்புரி சினிமா நட்சத்திரமான இவர் உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். தினேஷ் லால் யாதவுக்கு எதிராக தர்மேந்திர யாதவை சமாஜ்வாதி கட்சி நிறுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், அந்த இடத்தை சமாஜ்வாதி கட்சிக்கு தக்க வைத்துக் கொண்டார். 2022 இல், அகிலேஷ் யாதவ் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் பதவி விலகினார். 2022 இடைத்தேர்தலில் தினேஷ் லால் யாதவ் 8,679 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேவ் ஆதிகாரி & ஹிரன் சட்டர்ஜி:
மேற்கு வங்க திரையுலகைச் சேர்ந்த இரண்டு நடிகர்களான தேவ் ஆதிகாரி மற்றும் ஹிரன் சட்டர்ஜி ஆகியோர் கட்டல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனர். இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் போட்டியிடுகின்றனர். கேஷ்பூரில் ஹிரன் சட்டர்ஜி பயங்கரவாத சூழலை வளர்ப்பதாக தேவ் ஆதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், தேவ்வின் தனிப்பட்ட செயலாளர் "தங்கக் கடத்தல் வழக்கில் கையும் களவுமாக பிடிபட்ட பிறகும், வேலை வாய்ப்புக்காக பண மோசடி செய்ததில்" தேவ் ஆதிகாரி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தவறிவிட்டதாக ஹிரன் சட்டர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜூன் மாலியா:
திரிணாமுல் காங்கிரஸ் மேதினிபூர் தொகுதியில் நடிகையும், அரசியல்வாதியுமான ஜூன் மாலியாவை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் அக்னிமித்ர பால், சிபிஐயின் பிப்லாப் பட்டா மற்றும் காங்கிரஸின் சம்புநாத் சட்டோபாத்யாய் உள்ளிட்டோர் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் மற்றும் சிபிஐ கட்சிகள் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்துவதால், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு இடையேதான் போட்டி அதிகமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தரப்பில் கூறுகின்றனர்.
சதாப்தி ராய்:
நடிகையாக இருந்து, அரசியல்வாதியாகவும், மூன்று முறை திரிணாமுல் எம்.பி.யாகவும் இருந்த பிர்பூம் தொகுதியில், சதாப்தி ராய், பா.ஜ.க சார்பில், காங்கிரசின் மில்டன் ரஷீத்தை எதிர்த்து, தேபாஷிஸ் தாரில் போட்டியிடுகிறார். 2019 மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கம் முழுவதும் பாரிய பாஜக அலைக்கு நடுவே, சதாப்தி ராய் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நவ்நீத் ராணா:
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் நடிகை நவ்நீத் ராணா போட்டியிடுகிறார். அவர் காங்கிரஸ் சார்பில் பல்வந்த் வான்கடே, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சஞ்சய்குமார் காட்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சுரேஷ் கோபி:
மலையாள நடிகரான சுரேஷ் கோபி காங்கிரஸின் கோட்டையான திருச்சூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மாநில முன்னாள் அமைச்சர் வி.எஸ்.சுனில் குமாரும் (சிபிஐ) காங்கிரஸ் சார்பில் கே.முரளீதரனும் போட்டியிடுகின்றனர்.
ராதிகா சரத்குமார்:
தமிழ் சினிமாவின் நடிகையான ராதிகா சரத்குமார் பாஜக தரப்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் மாணிக்கம் தாக்கூர், தேமுதிக தரப்பில் விஜய் பிரபாகர், நாம் தமிழர் கட்சி தரப்பில் கௌசிக் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.