செஸ் ஒலிம்பியாட் தொடர்.. 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை...மாற்று பணிநாள் அறிவிப்பு
சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்...
செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்கவுள்ளதை முன்னிட்டு சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் 188 நாடுகள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆதொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடிம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து முன்னணி சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளார்கள். இதற்காக அனைத்து கட்டுமானங்களையும் புதுப்பிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டதோடு பணிகள் நிறைவுற்று போட்டித் தொடருக்கான ஒத்திகை சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 28 ஆம் தேதி சென்னை வரவுள்ளார். தொடக்கவிழாவை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் அன்றைய ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை பரிசீலித்து விடுமுறை அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
TN Govt announces local holiday for Govt offices and private concerns on July 28 in view of inauguration of 44th Chess Olympiad in 4 districts - Chennai, Thiruvallur, Chengalpattu & Kancheepuram; in lieu of this, August 27 will be a working day for govt offices. #ChessOlympiad pic.twitter.com/tG65B8OhXn
— Mahesh M (@mahi190796) July 26, 2022
அதில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு. காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆணை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் மாதத்தின் 4வது சனிக்கிழமையான 27 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்