மேலும் அறிய
Advertisement
George Ponniah | மேடைப்பேச்சு என்றாலே சர்ச்சை தான்.. யார் இந்த ஜார்ஜ் பொன்னையா?
குமரி மாவட்டம் அருமணை கிறிஸ்துமஸ் திருவிழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெறும், இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியை தாக்கி பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்
யார் இந்த ஜார்ஜ் பொன்னையா?
ஜார்ஜ் பொன்னையா வயது 65. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சலை சேர்ந்தவர். கத்தோலிக்க பாதிரியார். அங்குள்ள சேவியர் இன்ஜினியரிங் கல்லூரியின் தாளாளராக இருந்தார். முளகுமூடு வட்டாரத்தில் கத்தோலிக்க டிரஸ்ட்கள், நிதி நிறுவனம் நடத்தியுள்ளார். இவரது சகோதரர் பி. டி எஸ். மணி, ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் பொறுப்புகளில் இருந்துள்ளார். ஜார்ஜ் பொன்னையா எப்போதும் சர்ச்சை மேடைப் பேச்சுகள் பேசுவதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
குமரி மாவட்டம் அருமணை கிறிஸ்துமஸ் திருவிழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெறும், இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். இந்த விழாவில் டி.டி.வி, இலங்கை அமைச்சர்கள் என பலரும் பங்கேற்று சிறப்பிப்பது உண்டு. அருமனை கிறிஸ்துமஸ் திருவிழாவினை எப்போதும் முன்னின்று நடத்துபவர் தான் இந்த ஜார்ஜ் பொன்னையா.
கிறிஸ்துவ ஐக்கிய பேரமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், குழித்துறை மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பனவிளை ஆலயத்தின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றி வருகிறார்.
சமூக பிரச்சினைகள், கூடங்குளம் அணு உலை போராட்டம் போன்றவற்றில் பங்கேற்றவர். இந்நிலையில் தான் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரும், பனவிளை சர்ச் பங்குதந்தையுமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை பேசினார். அதில், `தி.மு.க ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை. சேகர்பாபு, மனோதங்கராஜ் ஆகியோர் கோயிலுக்கு போகிறார்கள். என்னதான் நீங்கள் கோயிலுக்குப் போனாலும் இந்துக்கள் உங்களுக்கு ஓட்டுப்போடமாட்டார்கள்.
போராட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ காலில் செருப்பு போடாமல் நடக்கிறார். பாரத மாதாவை அவர் செருப்புப்போட்டு மிதிக்கமாட்டாராம். ஆனால் பாரதமாதாவின் அசிங்கம் நம் மீது பட்டு, சொறி சிரங்கு ஏற்படாமல் இருக்க நாம் ஷூ போட்டுவிட்டு நடக்கிறோம். பாரதமாதா ரொம்ப டேஞ்சர் என பேசியதுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
அந்த வீடியோ வைரலாக பரவியதால் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து இந்து அமைப்பினர் காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் அருமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அருமனை வட்டார கிறிஸ்துமஸ் விழா தலைவர் ஸ்டீபன் மற்றும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஆகியோர் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார். அவர் பங்குதந்தையாக இருக்கும் பனவிளையில் நேற்று போலீஸார் தேடிச்சென்றனர். அவர் அங்கு இல்லை. இதையடுத்து மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion