கரூரில் சமத்துவபுரம் பராமரிப்பு பணி - மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
புகளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவரும் ஆய்வு செய்தார்கள்.
அனைத்துத்துறை வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும் கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.பி.ராஜேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். கரூர் மாவட்டம், வெள்ளியனை, மண்மங்கலம், புகளூர் ஆகிய பகுதிகளில் நேற்று ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.பி.ராஜேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
கரூர் மாவட்டத்தின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள், வேளான் உபகரணங்கள் குறித்தும், மாநகராட்சி மற்றும் நகராட்சி வரவு செலவுகள் குறித்தும், ஊரக வளர்ச்சி துறை பணிகள் மேம்படுத்துவது குறித்தும் காவேரி, குண்டாறு, வைகை இணைக்கும் பணிகள் மேம்படுத்துவது குறித்தும், வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறை மூலம் பணிகள் மேம்படுத்துவது குறித்தும், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குவது குறித்தும். மாற்றுதிறனாளிகள் நலத்துறை பணிகள் மேம்படுத்துவது குறித்தும், பல்வேறு துறைகள் பணிகள் மேம்படுத்துவது குறித்தும், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் (21.07.2022) அன்று நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று (22.07.2022) கரூர், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியனை ஊராட்சி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம் பணிகளை பார்வையிட்டு கட்டிடத்தின் அளவு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தும், அதே வெள்ளியணையில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டிடங்களை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பழுது பாரமரிக்கும் பணிகளையும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நெகிழி கழிவுகளை மறுபயன்பாடு செய்ய, சாலை அமைக்க மூலப்பொருட்கள் தயார் செய்யும் பணிகளையும், மண்மங்கலம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டிடங்களை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பழுது பராமரிப்பு பணிகளையும், மேலும், புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலக செயல் முறைகள் குறித்து கோப்புகள் பராமரிப்புகள் குறித்தும், தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.பி.ராஜேஷ். நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பின்னர் புகளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்கள்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, வட்டாட்சியர்கள் மோகன்ராஜ்(புகளூர்), ராதிகா(மண்மங்களம்), வட்டார வளர்ச்சி விஜயலெட்சுமி(கரூர்),அலுவலர்கள் பாலசந்தர்(தாந்தோணி), மன்ற தலைவர்கள்.ஊராட்சி தலைவர் சுப்பிரமணி(வெள்ளியனை) திருமதி ஜெயமாள் (மண்மங்கலம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்