அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: சென்னையில் வானவில் விழாவை தொடங்கி வைத்த தமிழச்சி தங்கபாண்டியன்
LGBTQIA+ மக்களுக்கான மாதமாக ஜூன் மாதம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூரில் வானவில் விழா கொண்டாடப்பட்டது. தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கி வைத்தார்.
LGBTQIA+ மக்களுக்கான மாதமாக ஜூன் மாதம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியின் தொடக்கமாக நேற்று (26/06/2022) சென்னை எழும்பூரில் வானவில் விழா கொண்டாடப்பட்டது. இதில் தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு ஜூன் மாதமும் உலகம் முழுவதும் LGBTQIA+ மக்களின் கொண்டாட்டமாக பிரைடு மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்கள் மற்ற விழாக்களை விடவும் மேளதாளத்துடன் வண்ணமயமாகவும், ஆடல் பாடலுடனும் நடைபெறும். பார்ப்பவர்களையும் சேர்த்து கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும் இந்த பிரைடு மாத கொண்டாடத்தின் ஒரு பகுதி, நேற்று சென்னை எழும்பூரில் கோலகலமாக கொண்டாடப்பட்டது.
அன்பிற்கு உண்டோ அடைக்கு தாழ் என்ற குறளினை முன்னிலைப் படுத்தி கொண்டாடப்பட்ட இந்த கொண்டாட்டத்திற்காக தமிழகம் மட்டுமிலாமல் அண்டை மாநிலங்களிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வந்து கலந்து கொண்டனர். இதில் LGBTQIA+ மக்களை ஊக்குவிக்கும் விதமாக எழுத்தாளரும் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
Trans rights needs global recognition and greater participation amongst nation- states as well to come together for a consensus and more inclusive policies for the welfare of the LGBTQI+ community.#PrideParade #Australia #Chennai #LGBTQI+ #transrights
— தமிழச்சி (@ThamizhachiTh) June 27, 2022
2/2
தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்ட அவர், பேரணியில் முழங்கப்பட்ட, “எங்கள் பாலினம் எங்கள் உரிமை” வாசகங்களையும் முழங்கினார். கொரோனா கால ஊரடங்குகளுக்கு பிறகு நடந்த பிரைடு மாத கொண்டாட்டம் என்பதால், இரண்டு ஆண்டுகள் ஆவலோடு காத்திருந்த LGBTQIA+ மக்களும், LGBTQIA+ ஆதரவாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
எங்களுக்கான நாளை நாங்கள் கொண்டாடாமல் யார் கொண்டாடுவார்கள் என்ற கேள்வியோடும், ”மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னைப் போல அவனப்போல எட்டு சாணு உயரமுள்ள மனுசங்கடா” என்ற முற்போக்குக் கவிஞர் இன்குலாப் எழுதிய பாடல் வரிகளை பதாகைகளில் ஏந்தியும் பேரணியில் கலந்து கொண்டனர். நாங்கள் குற்றவாளிகள் இல்லை எனவும் அவர்கள் உரக்க தெரிவித்து பேரணியினை கோலாகலமாக நடத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்