கரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட எஸ்பி சுந்தரபாதனம் முன்னிலையிலும் மாவட்ட அளவிலான சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு குழு கூட்டம்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட எஸ்பி சுந்தரபாதனம் முன்னிலையிலும் மாவட்ட அளவிலான சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து இந்திய நுகர்வோர் குழு சார்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கையின் அடிப்படையில் சென்ற ஆண்டு ஜூலை 29 இல் பழைய பைபாஸ் சாலையில் அதாவது பாரத ஸ்டேட் வங்கிக்கு தென்புறம் உள்ள டிரான்ஸ்பர் அகற்றி வாகனங்களை தங்கு தடை இன்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கரூர் மாநகராட்சியும் மாநில நெடுஞ்சாலையும் மூலமாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் அந்த சாலையிலே சாலை முடியும் இடத்தில் இரண்டு மின்கம்பங்கள் சாலை போக்குவரத்துக்கு தடையாக உள்ளது. எனவே, அந்த மின்கம்பங்களை சற்று கீழ் புறத்தில் மாற்றி அமைக்கும்படி கோரப்பட்டது. ஆனால் கரூர் மாநகராட்சி மாநில நெடுஞ்சாலை மூலமாக நாலாவது வரை நடவடிக்கை எடுப்பது குறித்து கரூர் மாநகரில் உள்ள டிரான்ஸ்பர்மார்களை சுற்றி பாதுகாப்பு கம்பிகள் இல்லாமல் உள்ளவற்றுக்கு கரூர் மின் பகிர்மான வட்டம் கம்பிகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதும் குறித்தும், விவாதிக்கப்பட்டது .
கரூர் தொழிற்பேட்டை தில்லை நகர் முதல் தெருவில் உள்ள பொதுக் கிணறு சுற்றுச்சுவர் இல்லாமல் ஆபத்தாக காணப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, இதன் உண்மை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் தான்தோணி ஒன்றியம் ஊராட்சிக்குட்பட்ட குடித்தெருவில் சாக்கடை கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட குழு அப்படியே உள்ளதாகவும், செய்திகள் வெளியிடப்பட்டன. எனவே இந்த உண்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அரசு விரைவு பேருந்து கழக மேலாண்மை இயக்குனர் அனைத்து கூட்டம் மேலாளர்கள் கிளை மேலாளர் ஆகியோர்களுக்கு டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் சிலர் மது அருந்திவிட்டு பணியில் இருப்பதாக புகார்கள் வரப்பெற்ற தன் அடிப்படையில் சுற்றறிக்கை எழுதியுள்ளார். எனவே கரூர் மாவட்டத்தில் மேலாண்மை இயக்குனரின் சுற்றறிக்கைக்கு எடுத்த நடவடிக்கை குறித்தும் ஈரோடு சாலையில் உள்ள ராசம்மா கல்வி நிறுவனத்திற்கு கீழ்புறம் பாறைகள் உடைத்து பெரிய குளம் உள்ளது அது பிரதான சாலைக்கு அருகில் ஆபத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதனை ஆய்வு செய்து ஆபத்து உள்ளதாக இருந்தால் தக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்திய மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக அச்சிடும் சட்டவிரோதமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீதும் நடவடிக்கை கள ஆய்வு மேற்கொள்ளும் போதும் காவல்துறை உடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வழியாக கலெக்டர் அலுவலக மேலாளர் சந்திரசேகர் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்