கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு; அமராவதி அணைக்கு அதிகரிப்பு
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து, குறைந்த நிலையில், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 5,796 கன அடியாக இருந்தது.
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு:
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து, குறைந்த நிலையில், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 5,796 கன அடியாக இருந்தது. தண்ணீர் வரத்து வினாடிக்கு, 5,385 கன அடியாக குறைந்தது. தென்கரை பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 100 கன அடி தண்ணீரும், கீழ்கட்டளை வாய்க்காலில், 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
அமராவதி அணை:
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, வினாடிக்கு 241அடி தண்ணீர் வந்தது. நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 268 கனஅடியாக அதிகரித்தது. அமராவதி அணையில் இருந்து ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை நீர்மட்டம், 61.22 அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை:
கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 8. 13 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்:
கரூர் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் குளித்தலையில், 4 மி.மீ., மயிலம்பட்டியில் 3 மி.மீ., மலையும் பெய்தது.