நேற்று கூட என்னிடம் பேசினார்.. அதிர்ச்சியில் இருக்கிறேன்.. நடிகர் சிலம்பரசன்
நேற்று கூட என்னிடம் பேசினார். இணைந்து படம் செய்யலாம் என்று கூறினார் . இன்று காலை அவர் நம்மிடம் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை உண்டாகி இருக்கிறது வருத்தத்துடன் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டு உள்ளார் சிலம்பரசன் .
பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார். 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குநராக பெயர் பெற்றார். மேலும், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர். சிவாஜி: தி பாஸ், செல்லமே, பாய்ஸ், விரும்புகிறேன், முதல்வன், நேருக்கு நேர், காதல் தேசம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக, கல்கி, இந்தியா டுடே, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி போன்ற முக்கியப் பத்திரிக்கை நிறுவனங்களில் ஃப்ரீலான்ஸ் புகைப்பட பத்திரிகையாளராக பணியாற்றினார்.
<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/RIPkvanandsir?src=hash&ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#RIPkvanandsir</a> 💔 <a href="https://t.co/siWJllzlHb" rel='nofollow'>pic.twitter.com/siWJllzlHb</a></p>— Silambarasan TR (@SilambarasanTR_) <a href="https://twitter.com/SilambarasanTR_/status/1388022261689372675?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 30, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இந்நிலையில் , சினிமாவில் பலரும் இவரின் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் சிம்பு மிகுந்த அதிர்ச்சியிலும் ,வருத்தத்தில் பதிவு ஒன்றை செய்து இருந்தார். “தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை என்னிடம் சொல்லி இருந்தார். நேற்று கூட என்னிடம் பேசினார். இணைந்து படம் செய்யலாம் என்று கூறினார். இன்று காலை காலை அவர் நம்முடன் இல்லை , இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்து இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நிச்சயம் பேசப்படும் பல படங்களை அவர் கொடுத்திருப்பார். அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும், திரை உலகினருக்கும், எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார் .