மேலும் அறிய

கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

தாய் மற்றும் கள்ளக் காதலன் சேர்ந்து 2 வயது குழந்தையை அடித்துக் கொன்ற கொடூரம் - சிக்கியது எப்படி ?

திருமணம் மீறிய உறவு

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கீசார பகுதியில் வசித்து வருபவர் சுவாமி. இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் இவருக்கும் தீகுலா கிராமத்தை சேர்ந்த ஜோதி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் 6 வயதில் ஒரு மகளும் 2 வயதில் ஹரிகிரிஷ்ணா என்ற மகனும் இருந்தனர்.

திருமணமான சில மாதங்களிலேயே ஜோதிக்கு , தீகுலா கிராமத்தை சேர்ந்த நவீன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. சுவாமி அடிக்கடி வேலைக்கு வெளியூருக்கு செல்லும் நிலையில் குழந்தைகளுடன் வீட்டில் இருக்கும் ஜோதி தனது கள்ளக் காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

தூக்கி வீசப்பட்ட குழந்தை

வழக்கம் போல கடந்த (மே 29) ஆம் தேதி சுவாமி வேலைக்கு சென்றிருந்த நிலையில் ஜோதி தனது கள்ளக் காதலனை வீட்டிற்கு அழைத்திருக்கிறார். பின்னர் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் ஜோதியின் இரண்டாவது மகன் ஹரிகிருஷ்ணன் தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோதி மற்றும் அவரது கள்ளக் காதலன் நவீன் ஆகிய இருவரும் சேர்ந்து குழந்தையை சரமாரியாக தாக்கி தூக்கி வீசியதில் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

குழந்தை உயிரிக்கு போராடுவதை அறிந்து அதிர்ச்சியடைந்த இருவரும் உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சி.சி.டி.வியில் சிக்கிய காட்சி

இதனை தொடர்ந்து தனது கணவனுக்கு போன் செய்த ஜோதி குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த சுவாமி மனைவி கூறியதை நம்பி இறுதி சடங்கு செய்து குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்திருக்கிறார்.

பின்னர் வழக்கம் போல வேலைக்கு சென்று வந்த சுவாமிக்கு நாளடைவில் ஜோதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டின் சுவரில் இருந்த ரத்தக் கறையை பார்த்து அதிர்ச்சியடைந்த சுவாமிக்கு குழந்தையின் மரணத்திலும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள வீடுகளில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்திருக்கிறார். அதில் குழந்தை இறந்ததாக சொல்லப்படும் நாளில் ஜோதி நவீன் உடன் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்தது தெரிய வந்துள்ளது.

தலைமறைவான கள்ளக் காதலன்

ஆத்திரமடைந்த சுவாமி இது குறித்து தனது மனைவி ஜோதியிடம் கேட்ட போது முன்னுக்கு பின்னாக பதிலளித்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து கடந்த (ஜூன் 19) காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் (ஜூன் 20) ஆம் தேதி ஜோதியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜோதியை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கள்ளக் காதலன் நவீனை தேடி வருகின்றனர். மேலும் குழந்தையில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

முல்லைப் பெரியாறு: 142 அடி நீர்மட்டத்தை உயர்த்தினால் நீதிமன்றம் செல்வோம் - கேரளா எச்சரிக்கை!
முல்லைப் பெரியாறு: 142 அடி நீர்மட்டத்தை உயர்த்தினால் நீதிமன்றம் செல்வோம் - கேரளா எச்சரிக்கை!
வாகன ஓட்டிகளே உஷார்! - புதுச்சேரி - கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே...
வாகன ஓட்டிகளே உஷார்! - புதுச்சேரி - கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே...
நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்கள்: கூட்ட நெரிசலுக்கு தீர்வு! முன்பதிவு இன்று முதல்!
நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்கள்: கூட்ட நெரிசலுக்கு தீர்வு! முன்பதிவு இன்று முதல்!
Udhayanidhi Stalin: உதயநிதியின் ஆணவம்.. திமுகவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையை பேசுறதே வேலை.. தமிழிசை அட்டாக்!
Udhayanidhi Stalin: உதயநிதியின் ஆணவம்.. திமுகவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையை பேசுறதே வேலை.. தமிழிசை அட்டாக்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget