கரூர்: கணவர் மீது பொய் வழக்கு; மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனைவி தர்ணா
கரூரில் காவல்துறையை கண்டித்து இளம்பெண் குடும்பத்தாருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கரூரில் காவல்துறையை கண்டித்து இளம்பெண் குடும்பத்தாருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகர் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். அவருடைய மனைவி ரம்யா. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. அதிமுகவில் உறுப்பினராக உள்ள மகேந்திரன் கரூர் செங்குந்தபுரம் பகுதியில் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்து உள்ளார். கடந்த மாதம் மகேந்திரன் மற்றும் சுரேஷ் இருவரும் வழிபறியில் ஈடுபட்டதாக கூறி தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இருவரும் நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தினமும் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் காலை, மாலை என இரு வேலையும் கையெழுத்து போட்டு வருகின்றனர். வழக்கம் போல இருவரும் இன்று கையெழுத்து போடுவதற்காக காவல் நிலையத்திற்கு சென்று உள்ளனர். மகேந்திரன் வாங்கி வைத்துவிட்டு காவல் நிலையத்திலே அமர வைத்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேந்திரனின் குடும்பத்தார் வழக்கறிஞருடன் காவல் நிலையத்திற்கு சென்று கேட்ட பொழுது, அரை மணி நேரத்தில் அனுப்பி வைப்பதாக கூறி மகேந்திரன் வீட்டில் போதை மாத்திரை இருந்ததாக கூறி மற்றொரு வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் தனது கணவர் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டு கைது செய்ததாக, போலீசாரை கண்டித்து மகேந்திரனின் மனைவி கைக்குழந்தையுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுப்பட்ட மகேந்திரனின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரம்யா, திமுகவின் தூண்டுதலின் பேரில் காவல்துறையை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
நிதி நிறுவன அதிபருக்கு கத்தி குத்து. கார்பென்டர் கைது.
கரூர் அருகே, நிதி நிறுவன அதிபரை கத்தியால் குத்திய, கார்பெண்டரை போலீசார் கைது செய்தனர். கரூர், தெற்கு காந்திகிராமம், சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், கார்பெண்டர். இவருக்கும், கரூர் ராயனூர் பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் மனைவிக்கும், தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. அதை அறிந்த நிதி நிறுவன அதிபர் கடந்த ஒன்றில் இரவு மோகன் வீட்டுக்குச் சென்று, தட்டி கேட்டு உள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மோகன், நிதி நிறுவன அதிபரை கத்தியால் குத்தியுள்ளார். அதில் காயமடைந்த நிதி நிறுவன அதிபர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு அவர் கொடுத்த புகாரின் பேரில், கார்பெண்டர் மோகனை, தான்தோன்றி மலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து குடித்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், விவசாய தொழிலாளி. இவருக்கும் அதை ஊரை சேர்ந்த கேட்டரிங் சர்வீஸ் தொழிலாளி சுந்தர்ராஜ், என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக, சுந்தர்ராஜ் பகவதி அம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த மணிகண்டனை, கத்தியால் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் மணிகண்டனை மீட்டு, கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரியின் படி, மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து சுந்தர்ராஜை கைது செய்தனர்.