மின்சார கட்டணத்தை குறைப்போம் என்று திமுகவினர் சொல்லிவிட்டு 54 சதவீதம் உயர்வு வருடத்திற்கு 6 சதவீத மின்சார கட்டண உயர்வு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு.
மின்சார கட்டணத்தை குறைப்போம் என்று திமுகவினர் சொல்லிவிட்டு 54 சதவீதம் உயர்வு வருடத்திற்கு 6 சதவீத மின்சார கட்டண உயர்வு.

மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. விரைவில் பேருந்து கட்டணம் உயர இருக்கிறது, பால் விலை உயர்ந்து விட்டது, நிலத்தின் மதிப்பீடு கட்டணம் உயர்ந்து விட்டது, பத்திரப்பதிவு கட்டணம் உயர்ந்துவிட்டது. 50% கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது இந்த ஆட்சி வேண்டுமா என சிந்தித்து வாக்களியுங்கள் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.
கரூர் சட்டமன்றத் தொகுதி கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் கரூர் அருகே வாங்கல் பகுதியில் உள்ள வாங்கலம்மன் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அவைத்தலைவர் திரு வி கா தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னச்சாமி, காமராஜ் என சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், மின்சார கட்டணத்தை குறைப்போம் என்று திமுகவினர் சொல்லிவிட்டு 54 சதவீதம் உயர்வு வருடத்திற்கு ஆறு சதவீத மின்சார கட்டண உயர்வு, மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதம் வந்தால் 6 சதவீதம் மின்சார கட்டண உதவி உயர்வு, 100 ரூபாய் மின் கட்டணம் செலுத்தினால் 106 ரூபாயாக கட்ட வேண்டும் மின்சாரத் துறையில் அலுவலகத்தில் பணிபுரியும் அவர்களுக்கு மின்சார கட்டண உயர்வு எவ்வளவு என தெரியாத நிலை உள்ளது.
மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது விரைவில் பேருந்து கட்டணம் உயர இருக்கிறது, பால் விலை உயர்ந்து விட்டது, நிலத்தின் மதிப்பீடு கட்டணம் உயர்ந்து விட்டது, பத்திரப்பதிவு கட்டணம் உயர்ந்து விட்டது, என 50% கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி வேண்டுமா என்ன சிந்தித்து வாக்களியுங்கள். திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் பேசுகையில் எடப்படியார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடந்த 4 ஆண்டு 2 மாத ஆட்சி காலத்தில் சிறப்பான ஆட்சி நடத்தியவர்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சிறு வயதில் தான் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டது. இதனை நினைத்து குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது என்பதை அறிந்து சத்துணவு திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தியவர் எம்ஜிஆர் என்று பெருமிதம் தெரிவித்தார். திட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் நமது தலைவர் அதை பாதுகாத்து செயல்படுத்துவது நமது கடமை ஸ்டாலினால் நாங்கள் கொண்டு வந்த திட்டம் என சொல்ல முடியுமா கடந்த 23 ஆண்டுகளில் 5.18 லட்சம் கோடி கடன் இருந்தது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பாக 5.175 லட்சம் கோடி இருந்தது இந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வரப்போகிறது. என்ன திட்டம் வந்திருக்கிறது முதலீடு திட்டங்களால் வந்திருக்கிறதா என அதை தான் எடப்பாடி யார் அவர்கள் கேள்வி எழுப்புகிறார் ஏதாவது முதலீடு திட்டம் வந்திருக்கிறதா இல்லை ஏமாற்று ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எங்கு பார்த்தாலும் தினந்தோறும் ஏமாற்று ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

