கரூர் தோகைமலை யூனியன் திமுக வசமானது - உற்சாகத்தில் திமுக நிர்வாகிகள்
தோகைமலை யூனியன் குழு புதிய தலைவராக திமுகவைச் சேர்ந்த சுகந்தி சசிகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தோகமலை யூனியன் குழு தலை புதிய தலைவராக சுகந்தி சசிகுமார் தேர்வு.
தோகைமலை யூனியன் குழு புதிய தலைவராக திமுகவைச் சேர்ந்த சுகந்தி சசிகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குளித்தலை அடுத்த தோகைமலை யூனியன் 15 கவுன்சிலர்கள் கொண்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 10 கவுன்சிலர்களும், திமுக 4 கவுன்சிலர்களும், பாஜக ஒரு கவுன்சிலரும் என மொத்தம் 15 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். யூனியன் குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த லதா ரங்கசாமி தலைவராகவும், துணைத்தலைவராக பாப்பாத்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் எட்டு பேர் திமுகவில் இணைந்தனர். திமுக கவுன்சிலர் லதா வேலுசாமி அதிமுகவில் இணைந்து கொண்டார். இதனால் திமுக 11 கவுன்சிலர்களும், அதிமுக 3 கவுன்சிலர்களும், பாஜக ஒரு கவுன்சிலர் என 15 கவுன்சிலர்கள் பதவியில் இருந்தன. இந்நிலையில் யூனியன் குழு தலைவர் மீது திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் குளித்தலை ஆர்டிஓ அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் எட்டாம் தேதி ஆர்டிஓ புஷ்பா தேவி தலைமையில் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்டு தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவைச் சேர்ந்த யூனியன் தலைவர் லதா பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 11:00 மணிக்கு யூனியன் கூட்டரங்கில் புதிய யூனியன் குழு தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. மாவட்ட தணிக்கை உதவி இயக்குனர் இந்திராணி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார். அதில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் சுகந்தி சசிகுமார் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். மற்றவர்கள் யாரும் வேப்பு மனு தாக்கல் செய்யாததால் சுகந்தி சசிகுமார் போட்டியின்றி தோகைமலை யூனியன் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தேன்மொழி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, ராமர், தியாகராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மற்ற மாமன்ற உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர். பல ஆண்டுகளாக தோகமலை யூனியன் குழு தலைவராக அதிமுக, திமுக என மாறி மாறி தலைவர் பதவிக்கு போட்டி போட்ட நிலையில் தற்போது தோகமலை யூனியன் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த சுகந்தி சசிகுமார் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.