கரூர் தெற்கு காந்தி கிராமம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா.. விவரம்..
கரூர் மாவட்டம், தெற்கு காந்தி கிராமம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
கரூர் தெற்கு காந்திகிராமம் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்த குடத்தை பக்தர்கள் எடுத்து வந்தனர்.
கரூர் மாவட்டம், தெற்கு காந்திகிராமம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற திங்கட்கிழமை காலை நடைபெறுவதை ஒட்டி முக்கிய நிகழ்வாக கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு பெண் பக்தர்கள் மற்றும் விழா குழுவினர்கள் கொடுமுடி ஆற்றில் நீராடிய பிறகு தீர்த்த முத்திரைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக மேள தாளங்கள் முழங்க அங்கிருந்து வாகனம் மூலம் கரூர் காந்திகிராமம் வந்தடைந்த பிறகு காந்தி கிராமம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அனைத்து பக்தர்களும், விழா குழுவினரும் வாணவேடிக்கைக்கு உடன் விநாயகர் ஊஞ்சல் வாகனத்தில் முன்வர அதன் தொடர்ச்சியாக பக்தர்கள் பத்தி பரவசத்துடன் ஆடிப் பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்தடைந்தனர்.
அதை தொடர்ச்சியாக அனைத்து பக்தர்களுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு பிரசாத வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தெற்கு காந்தி கிராமம் வீட்டு வசதி வாரிய காலனி குடியிருப்பு பொதுமக்கள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial