மேலும் அறிய

அறுவடை செய்ய ஆட்கள் இன்றி அழுகும் எண்ணெய் வித்துக்கள் - நூறுநாள் வேலை பணியாளர்களை ஈடுபடுத்த முதல்வருக்கு கோரிக்கை

எண்ணெய் வித்துக்களை அறுவடை செய்வதற்கு 100 நாள் திட்ட பணியாளர்களை நிலக்கடலை பயிரை அறுவடை செய்ய பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு.

கரூர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நிலக்கடலை, எள், சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை அறுவடை செய்ய அனுமதிக்கக்கோரி சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டுமென கரூர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறுவடை செய்ய ஆட்கள் இன்றி அழுகும் எண்ணெய் வித்துக்கள் - நூறுநாள் வேலை பணியாளர்களை ஈடுபடுத்த முதல்வருக்கு கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டு காலமாக போதிய மழை இல்லாத காரணத்தினால் விவசாயம் கடும் பாதிப்புக்குள்ளானது. இந்த நிலையில் இந்தாண்டு இரவை பாசனம் மூலமாக எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகியவற்றை பல்லாயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டனர். மயில் மற்றும் கால்நடை தாக்குதலில் இருந்து பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வந்த நிலையில் அறுவடை காலம் நெருங்கிவிட்டாலும் ஆட்கள் கிடைக்காததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நில கடலை நிலத்திலேயே முளைக்கும் தருவாயில் உள்ளது.

அறுவடை செய்ய ஆட்கள் இன்றி அழுகும் எண்ணெய் வித்துக்கள் - நூறுநாள் வேலை பணியாளர்களை ஈடுபடுத்த முதல்வருக்கு கோரிக்கை

எனவே அறுவடை பணிக்கு நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களை (MGNREGS) அறுவடை பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.  இதற்காக பங்குத்தொகைகளை வழங்கவும் தயாராக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  

அறுவடை செய்ய ஆட்கள் இன்றி அழுகும் எண்ணெய் வித்துக்கள் - நூறுநாள் வேலை பணியாளர்களை ஈடுபடுத்த முதல்வருக்கு கோரிக்கை

இது குறித்து வெள்ளியணை ஊராட்சி மன்றத் தலைவரும், கரூர் மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதி சுப்பிரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், நடப்பாண்டில் கரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலையும், 10 ஆயிரம் ஏக்கரிக் எள்ளும், 8 ஆயிரம் ஏக்கரில் மக்காசோளமும், 5 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளமும், பயிரிடப்பட்டு உள்ளன. இப்பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் ஆட்கள் கிடைக்காத காரணத்தால்  எண்ணெய் வித்துக்கள் நிலத்திலேயே முளைக்கும் தருவாயில் உள்ளன. மேலும், மீதமுள்ள பயிர்களை மயில்கள் கொத்தி விட்டு செல்கின்றன.   

அறுவடை செய்ய ஆட்கள் இன்றி அழுகும் எண்ணெய் வித்துக்கள் - நூறுநாள் வேலை பணியாளர்களை ஈடுபடுத்த முதல்வருக்கு கோரிக்கை

இத்தகைய தருவாயில் வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையாக எண்ணெய் வித்துக்களை அறுவடை செய்வதற்கு அவசரகால உதவியாக, 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கி, கூட்டத்தொடரில் இதுபற்றி அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget