கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணை வறண்ட நிலையில் உள்ளது. நான்கு பாசன வாய் காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
![கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு Karur Reduction of water opening in Karur Amaravati River TNN கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/3103eb4098290af56586cb23f0780e4b1683182314923183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணை வறண்ட நிலையில் உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை, 6 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாள் கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து நின்றதால், வறண்ட நிலையில் தடுப்பணை உள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் , 58.93 அடியா இருந்தது.
மாயனூர் கதவணை
கரூர் அருகே, மாயனூர் கதவனுக்கு, காலை, மழை காரணமாக வினாடிக்கு ,7,125 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய் காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங் காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடியுரம் கொண்ட நான்காம்ஜி அணையின் நீர்மட்டம் தற்போது, 32.64 அடியாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம் கா பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி அனைத்து தண்ணீர் வரத்து இல்லை. 26. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் ,12.95 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)