கரூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய ஆட்சியர்
கர்ப்ப காலத்தில் சரியான முறையில் மருத்துவர்கள் வழங்கக்கூடிய ஆலோசனை அறிவுரைகளையும் கடைபிடித்து நீங்களும் உடல் நிலை ஆரோக்கியத்துடனும் உங்கள் குழந்தைகளையும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்ய வேண்டும்.
கரூர் மாவட்டம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் வழங்கினார்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியம், கோவிந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு பொக்கிஷம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகத்தினை ஐசிஐசிஐ வங்கி நிறுவனம் சமூக பங்களிப்பு நிதியில் 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில் இந்த பொக்கிஷம் திட்டம் என்பது நம்முடைய கரூர் மாவட்டத்தில் மட்டுமே செயல்படுத்த கூடிய ஒரு சிறப்பு வாய்ந்த திட்டமாகும். இத்திட்டமானது கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அவர்களுக்கு வழங்கும் விதத்தில், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 3000 கர்ப்பிணி பெண்களுக்கு மேல் பொக்கிஷம் பெட்டகத்தினை வழங்கி இருக்கின்றோம். இந்த நாளில் நம்முடைய பயணத்தில் ஐசிஐசிஐ வங்கி இணைந்து கொண்டு அவர்களுடைய CSR (சமூக பொறுப்பு நிதி) பங்களிப்பின் மூலம் இந்தத் திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நாங்களும் வழங்குகின்றோம் என்று முடிவு செய்து கரூர் மாவட்டத்தில் 500 பொக்கிஷம் பெட்டகங்களை வழங்க சம்மதித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய திட்டத்தின் உடைய நோக்கத்தை திட்டத்தினை அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதை இதனை காட்டுகிறது. இதற்கு அனுமதி அளித்து இந்த பங்களிப்பை வழங்கிய வங்கியின் உடைய நிர்வாகத்திற்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கண்டிப்பாக பிறரையும் இது போன்ற திட்டங்களில் பங்கெடுப்பதற்கு ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை. அதுவும் குறிப்பாக நம்முடைய வங்கி மேலாளர்கள் தெரிவிக்கும்போது கூறினார்கள். இந்த பொக்கிஷம் என்பது இந்த பெட்டகத்தினுடைய ஒவ்வொரு பொருட்களும் விஷயம் ஒன்று குறிப்பிட்டு கூறினார்கள். பொக்கிஷம் குறியீடு அது அல்ல, பொக்கிஷம் என்பது தாயும், சேயும் தான் பொக்கிஷம். அதனைதான் அந்த பொக்கிஷம் பையில் தாயும், சேயும் படம் இடம்பெற்றுள்ளது. எனவே அந்த குட்டி சிசுவினை பாதுகாப்பதற்கான வழியில் தான் இந்த பொக்கிஷம் பெட்டகத்தினை 10 வகையான ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளது. எனவே நீங்கள் தான் பொக்கிஷம். உங்களை பாதுகாப்பது எங்களுடைய கடமை. அதேபோல நீங்களும் இந்த கர்ப்ப காலத்தில் சரியான முறையில் மருத்துவர்கள் வழங்கக்கூடிய ஆலோசனை கேட்டு அனைத்து அறிவுரைகளையும் கடைபிடித்து நீங்களும் உடல் நிலை ஆரோக்கியத்துடனும் உங்கள் குழந்தைகளையும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டு மீண்டும் ஒரு முறை இந்த இந்த திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய ICICI நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.