கரூர் பெரிய ஆண்டாங்கோயில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை.
கரூர் மாவட்டம், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு 2,064 கன அடி தண்ணீர் வந்தது. கரூர் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரூர் அருகே தடுப்பணைக்கு நேற்று, 2,064 கன அடி தண்ணீர் வந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 2,449 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 2,125 கன அடியிலிருந்து, 2,700 கன அடி தண்ணீர் திறப்பு, நேற்று அதிகரிக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோயில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 2,064 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அணை நீர்மட்டம், 88.36 அடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 17 ஆயிரத்து, 54 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 26 ஆயிரத்து, 400 கன அடியாக அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் 25 ஆயிரத்து, 580 கன அடி தண்ணீரும், நான்கு பாசன களை வாய்க்காலில், 820 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 33.86 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அனைத்து தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 16 அடி ஆக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், பெரியாண்டாங்கோயில் தடுப்பணைக்கு 2,064 கன அடி தண்ணீர் வரத்து வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரூர் அருகே பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ள நிலையில் பெரியாண்டாங்கோவில் சுற்றியுள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்