லாரியில் மணல் கடத்தல்; பைக்கில் சென்று மடக்கி பிடித்த விஏஓ - கரூரில் பரபரப்பு
மணல் லாரியை அரசு ஊழியர் இரு சக்கர வாகனத்தில் ஒரு கிலோமீட்டர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
![லாரியில் மணல் கடத்தல்; பைக்கில் சென்று மடக்கி பிடித்த விஏஓ - கரூரில் பரபரப்பு karur news People complain that sand is being smuggled in trucks near Krishnarayapuram - TNN லாரியில் மணல் கடத்தல்; பைக்கில் சென்று மடக்கி பிடித்த விஏஓ - கரூரில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/30/c309433d150aa012973945cf839c617b1717049783856113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிருஷ்ணராயபுரம் அருகே கட்டளை பகுதியில் லாரியில் மணல் கடத்தி செல்வதாக பொதுமக்கள் புகாரை தொடர்ந்து 1 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் விரட்டி சென்று மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த விஏஓ.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கட்டளை காவிரி பகுதியில் இரவு, பகல் பாராமல் திருட்டு தனமாக மணல் திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மணலை அள்ளிக்கொண்டு லாரி ஒன்று பைபாஸ் சாலையை நோக்கி மின்னல் வேகத்தில் சென்றுள்ளது.
இதை கவனித்த பொதுமக்கள் கிராம நிர்வாக அரலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அப்பகுதி விஏஒ ஸ்டாலின் பிரபு தன்னுடைய பைக்கில் வேகமாக விரட்டியுள்ளார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி சேஸ் செய்து லாரியை மடக்கியுள்ளார். விஏஒ லாரியை நெருங்கியதும் லாரியை சாலையிலேயே நிறுத்திய டிரைவர் சாவியை எடுத்து கொண்டு தப்பிஓடிவிட்டார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை செய்தார். பின்னர் மாற்று ஏற்பாடு செய்து லாரியை கொண்டு வந்து மாயனூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ரெங்கநாதபுரம் விஏஒ ஸ்டாலின் பிரபு கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் லாரியை அரசு ஊழியர் இரு சக்கர வாகனத்தில் ஒரு கிலோமீட்டர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)