மதுபிரியர்கள் மது குடித்துவிட்டு தொந்தரவு; பெண்கள், மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்
மது பிரியர்கள் மது குடித்துவிட்டுதொந்தரவு செய்வதாக இலைக் கடை வியாபாரிகள் குற்றச்சாட்டு.
கரூர் காமராஜ் மார்க்கெட் புதிதாக ஓராண்டுக்கு மேலாக கட்டி வரும் நிலையில் தற்காலிக கடைகள் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள கடைகளில் மது பிரியர்கள் மதுபானம் குடித்துவிட்டு தொந்தரவு செய்வதாக இலைக் கடை வியாபாரிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கரூர் காமராஜர் மார்க்கெட்டில் 174 கடைகள் அமைந்துள்ள நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியால் கடந்த மே மாதம் 17 - ஆம் 2022 புதிதாக காமராஜ் மார்க்கெட் கட்டுமான பணிகள் துவங்குவதற்கான பூமி பூஜை ரூபாய் 6 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை போடப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடங்கிய பணிகள் தற்போது வரை நிறைவு பெறவில்லை. அதன் அருகில் தற்காலிக கடைகளாக 29 கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் அதில் 13 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் இலை வியாபாரம் மட்டும் செய்து வருகின்றனர்.
ஒரு சில காய்கறி கடைகள் பழைய இடங்களிலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் காமராஜ் மார்க்கெட் எதிர்ப்புறம் உள்ள டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் தற்காலிக மார்க்கெட் இலை கடையின் அருகே உள்ள காலியாக உள்ள கடைகளில் மது பிரியர்கள் மது குடிக்கின்றனர். இதனால் பெண்கள் மற்றும் பள்ளி அருகில் உள்ள மாணவர்கள் அப்பகுதியை கடந்து செல்வது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகம், மேயர் ஆகியோரிடம் புகார் அளித்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தற்காலிக கடைகள் அமைந்துள்ள இடத்தில் இரட்டை வாய்க்கால் அமைந்துள்ள நிலையில் தற்பொழுது சாக்கடையாக மாறி பிளாஸ்டிக் கழிவுகள், மதுபான பாட்டில்கள் உள்ள நிலையில் சாக்கடையின் மேலே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மது பிரியர்கள் பழைய இரும்பு கடைகளில் விற்று அதன் மூலமாக வரும் பணத்தை கொண்டு மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதாகவும் அப்பகுதியில் குப்பைகள் தேங்கியுள்ளது அதனை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மேலும் இரட்டை வாய்க்கால் மேல்புறம் உள்ள மூடிகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அப்பகுதி வியாபாரிகளை ஒன்றிணைத்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.