பெண்கள் தங்களை பாதுகாக்க ஒரு ஆயுதமாக மாற வேண்டும் - கரூர் மாவட்ட ஆட்சியர்
கரூரில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தலைமையில் கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
இந்த முக்கியமான நிகழ்வில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கேடயம் என்ற ஒரு திட்டமானது நம்முடைய கரூர் மாவட்டத்தில் பெண்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து முக்கியமான திட்டத்தினை நம்முடைய மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நம்மளை தற்காத்துக் கொள்ளக்கூடிய ஒரு ஆயுதமாக இருப்பது தான் கேடயம். இந்த நிகழ்ச்சியானது பெண்கள் பணி புரியும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய கூடிய ஒரு சட்டம் மிக முக்கியமான அம்சத்தை வலியுறுத்தக்கூடிய சட்டமாகும். இந்த சட்டம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த சட்டத்தினை எப்படி நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பயிற்சியினை வழங்குவதற்கு தேவையானவர்கள் என்பது குறித்து ஆராயும் பொழுது சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட குழந்தை வளர்ப்பு அல்லது மற்றும் சமூக பாதுகாப்பு துறை அலுவலர்கள் முயற்சியினால் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியினை மேற்கொள்வதற்காக ஒரு மிகச் சிறந்த தொண்டு நிறுவனத்துடன் ஒருங்கிணைத்து இந்த பணிகளை மேற்கொள்வதற்கு நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றோம். சர்வதேச அளவில் இந்த இயக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள். முக்கிய விஷயமான பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பில் நமது மாவட்டத்தில் தான் இந்த பயிற்சியை வழங்கப்பட்டு வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற தொண்டு நிறுவனம் மிக சிறப்பான நிறுவனம் அவர்களுக்கும் நம்முடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்.
ஆறு மாதத்திற்கு முன்பாகவே இப்பயிற்சிகள் இங்கு நடத்தப்பட்டு உள்ளது. பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி மிகச்சிறந்த முறையில் நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பயிற்சியில் சில கருத்துக்களை உங்களிடமிருந்து கேட்டு பயிற்சியினை இன்னும் நேர்த்தியாக செய்து வருகிறார்கள் என்பதை நான் அறிவேன். இவர்களில் பல்வேறு அரசு துறையினருடைய குழுக்களில் உள்ளவர்கள் சிறப்பாக பயிற்சி அளிக்க வந்திருக்கிறார்கள். ஒரு பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு விஷயங்களை தொடர்ந்து நடந்து கொண்டு இருப்பது தான் உண்மை. அதை எப்படி எதிர்கொள்வதற்கு நாம் ஒரு ஆயுதமாக பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்லாமல் தாக்குதலும் செய்ய வேண்டும்.
இந்த பயிற்சி மூலமாக சிறப்பான முறையில் இயங்க வேண்டும். ‘ஒரு சட்டத்தின் மூலமாக ஏற்படுத்தக்கூடிய இந்த குழு உள்ளது. நாம் சட்ட விதிகளின்படி இயங்கினால் தவறுகள் செய்பவர்களை கண்டிப்பாக தண்டிக்க முடியும். சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அதை நாம் செய்ய வேண்டும். பணிபுரியும் இடங்களில் யாராவது எல்லை மீறினால் கண்டிப்பாக பாரபட்சம்மின்றி தண்டிக்க வேண்டும். இங்கு வந்திருக்கக்கூடிய ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் இரண்டு பெரிய கடமைகள் உள்ளது. அதாவது நாம் எப்பொழுதும் கற்பிப்போம் மற்றவர்களுடன் நலனுக்காக நம்முடைய நலனை விற்ற விடகூடாது. எல்லாத்திற்கும் ஒத்து போக வேண்டிய அவசியம் இல்லை. இந்த சட்டத்தை நாம் பணிபுரியும் இடத்தில் கண்டிப்பாக முழுமையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்த முனைய வேண்டும். நம்முடன் பணிபுரியக்கூடிய ஒவ்வொரு மகளிர் உடைய பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய வேண்டும் அந்த உறுதிமொழியுடன் இந்த அரங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்” என தெரிவித்தார்.