கரூரின் புதிய மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்ற உடன் அதிரடி ஆய்வு - ஆக்கிரப்புகளை அகற்ற எச்சரிக்கை
கரூர் உட்பட்ட பேருந்து நிலையம், மினி பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. தொழில் நகரமான வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.
![கரூரின் புதிய மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்ற உடன் அதிரடி ஆய்வு - ஆக்கிரப்புகளை அகற்ற எச்சரிக்கை Karur new Municipal Corporation Commissioner Saravanakumar takes charge of action investigatio TNN கரூரின் புதிய மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்ற உடன் அதிரடி ஆய்வு - ஆக்கிரப்புகளை அகற்ற எச்சரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/2a8e65c94115d939eb404e4d71ce868d1696682042228113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூரின் புதிய மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பொறுப்பேற்ற உடன் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். வாடகை பாக்கி, ஆக்கிரப்புகளை அகற்ற எச்சரிக்கை விடுத்த அவர் பேருந்து நிலையத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், மினி பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. தொழில் நகரமான கரூருக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. இது மட்டுமல்லாமல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு மினி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்திற்கு உள்ளே உள்ள கடைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை காட்டிலும், வெளிப்பக்கமாக ஆக்கிரமிப்புகள் செய்தும், உள் வாடகைக்கு விட்டும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளாக வாடகை பாக்கியும் இருந்து வருகிறது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் சரவணக்குமார் பேருந்து நிலையங்களை திடீர் ஆய்வு மேற்கொண்டார். வாடகை தாரர்களிடம் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள கடையின் அளவிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், முன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என எச்சரித்தார். கடை உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தாலும், வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக வாடகை நிலுவை தொகையை மாநகராட்சியில் செலுத்த வேண்டும் என எச்சரித்தார்.
பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் அதன் ஒப்பந்ததாரர்களை அழைத்து அவற்றை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண தொகை வெளியில் தெரியும்படி எழுதி வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பேருந்து நிலையத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள சுகாதார பணியாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)