கரூரில் உலக நன்மை வேண்டி 1 டன் பூஜை பொருட்கள் கொண்டு நவசண்டியாக பெருவிழா
தொடர்ந்து காலை ஸ்ரீ நவ சண்டியாக பெருவிழா நடைபெற்றது. இதில் 108 பூஜை பொருட்கள், 7 வகையான பழங்கள் உட்பட 1000 கிலோ சமித்துகளை வேள்வி தீயிலிட்டு வேள்வி யாகம் நடைபெற்றது.
![கரூரில் உலக நன்மை வேண்டி 1 டன் பூஜை பொருட்கள் கொண்டு நவசண்டியாக பெருவிழா Karur, Navsandiya festival with 1 ton of puja material for the good of the world TNN கரூரில் உலக நன்மை வேண்டி 1 டன் பூஜை பொருட்கள் கொண்டு நவசண்டியாக பெருவிழா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/ad40f0e3e66449ebcb7742b6d75ff9d81683369646040183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூரில் உலக நன்மை வேண்டி 1 டன் பூஜை பொருட்கள், பழங்கள் கொண்டு நடந்த ஸ்ரீ நவசண்டியாக பெருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஸ்ரமத்தில் உலக நன்மை வேண்டியும், தொழில் மேன்மையடையவும், உயர்ந்த எண்ணம், நற்பண்பு, மனநிம்மதி கிடைக்கவும் கல்வி, செல்வம் வீரமாகிய முற்செயல்களின் சக்தியாகிய சரஸ்வதி, லட்சுமி, காளி ஆகிய முப்பெரும் சக்தியின் வடிவமான ஸ்ரீ சண்டிகா தேவியின் பெரும் வேள்வியான ஸ்ரீ நவ சண்டியாக பெருவிழா காலை 16 விநாயகர்களுக்கு சிறப்பு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து காலை ஸ்ரீ நவ சண்டியாக பெருவிழா நடைபெற்றது. இதில் 108 பூஜை பொருட்கள், 7 வகையான பழங்கள் உட்பட 1000 கிலோ சமித்துகளை வேள்வி தீயிலிட்டு வேள்வி யாகம் நடைபெற்றது. இந்த யாக வேள்வியில் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் கரூர், கோவை, தேனி என தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான பாலக்காடு, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு தீட்சை பெற்றனர்.
கரூரில் எரிபொருள் சிக்கன வார விழாவை முன்னிட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி.
கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எரிபொருள் சிக்கன வார விழாவை முன்னிட்டு துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியானது வட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கி பேருந்து நிலைய ரவுண்டானா, திண்ணப்பா கார்னர், வடக்கு பிரதட்சணம் சாலை, ஆசாத் ரோடு வழியாக மீண்டும் வட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.
இப்பேரணியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மாவட்ட விற்பனை அதிகாரி சம்பத்குமார் ரெட்டி உள்ளிட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள், ஏஜென்சி உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில் அனைவரும் கையில் பதாகைகள் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)