ரூ.53 ஆயிரத்துக்கு ஏலம் போன உப்பு - கரூரில் நகரத்தார் பிள்ளையார் நோன்பு விழாவில் ருசிகர நிகழ்வு
கரூர் நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அக்ரி செந்தில்நாதன் தலைமையில் பொருளர்குமரப்பன் முன்னிலையில் நடைபெற்றது
கரூரில் நடந்த நகரத்தார் பிள்ளையார் நோன்பு விழாவில் ஒரு கிலோ உப்பு, 53 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ருசீகர நிகழ்வு நடைபெற்றது.
கரூர் வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தலைவர் அக்ரி சுப.செந்தில்நாதன் தலைமையில் பொருளர் கும.குமரப்பன் முன்னிலையில் நடைபெற்றது.
செயலாளர் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார். இதையடுத்து நோன்பு களைந்து பின் அவர்கள் கூடியிருந்த 300 பேருக்கு இலை எடுத்துக் கொடுக்க அனைவரும் நோன்பு களைந்தனர்.
தொடர்ந்து வழிபாட்டிற்காக பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு, சட்டை, ஸ்கூல் பேக், மணமாலை, குபேரன், விளக்கு, பிள்ளையார் உள்ளிட்ட 21 பொருட்களை சமூக அறங்களுக்கான நிதித் திரட்டலாய் மேலை பழநியப்பன் ஏலம் நடத்தினார். இதில் ருசிகரமாக, உப்பு ஒரு கிலோ 53,000 ரூபாய்க்கும் மாலை 24 ஆயிரம் ரூபாய்க்கும், கற்கண்டு 1 கிலோ 4101 திருவிளக்கு 12 ஆயிரம் ரூபாய் என மொத்தம் சுமார் மூன்று லட்சத்து ஒரு ஆயிரம் ஏலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.