அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு; புதிய பாசன வாய்க்காலில் நீர் திறப்பு நிறுத்தம்
கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 5,725 கனஅடியாக இருந்தது. தண்ணீர் வரத்து 5,655 கனஅடியாக குறைந்தது. தென்கரை பாசன வாய்க்கால், கீழ்கட்டளை வாய்க்கால், தண்ணீர் நிறுத்தப்பட்டது.
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு:
கரூர் அருகே, அமராவதி அணையில் இருந்து குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பெ.ஆ.,கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து இல்லாததால், வறண்ட நிலையில் உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு, வினாடிக்கு, 377 கன அடி தண்ணீர் வந்தது. நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 495 கனஅடியாக அதிகரித்தது. அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு, 244 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 300 அடி கொண்ட 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 62.22 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் அருகே பெரிய ஆண்டாள் கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதையடுத்து, தடுப்பணை வறண்ட நிலையில் உள்ளது.
மாயனூர் கதவணை:
கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 5,725 கனஅடியாக இருந்தது. தண்ணீர் வரத்து வினாடிக்கு, 5,655 கனஅடியாக குறைந்தது. தென்கரை பாசன வாய்க்கால், கீழ்கட்டளை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை:
கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் 8 .10 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்:
கரூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம்: கரூர், 7, அரவக்குறிச்சி, 4.2, அணைப்பாளையம், 6. கா பரமத்தி,33, குளித்தலை,5, தோகைமலை, 12, கிருஷ்ணராயபுரம் மாயனூர் தலா, 3, பஞ்சம்பட்டி, 18.6, கடவூர், 10.2, பாலவிடுதி, 27.2, மயிலம்பட்டி, 15 ஆகிய அளவுகளின் மழை பெய்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக 12.2 மி. மீ., மழை பதிவானது.