மேலும் அறிய

கரூரில் 6 முதல் 18 வயதுடைய இடை நின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

கரூர் மாவட்டத்தில் கல்வி இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 150 குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் கல்வி இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கரூரில் 6  முதல் 18 வயதுடைய இடை நின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

குறிப்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு இடங்களில் பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு நிகழ்ச்சி மூலம் இதுவரை 150 குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கல்வி பெற்று வருகிறார்கள். இந்நிலை மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளின்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் 19.12.2022 முதல் 11.01.2023 முடிய ஆறு முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா மற்றும் பள்ளியில் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி (மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) நடைபெற உள்ளது.
 
கல்வி காவலர் திட்டம்.

கரூரில் 6  முதல் 18 வயதுடைய இடை நின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

பள்ளி செல்லாக் குழந்தைகள் எவரேனும் தங்கள் ஊரிலோ அல்லது வீட்டின் அருகிலோ இருந்தால் பொதுமக்கள் 1098 எண்ணிற்கோ அல்லது 8903331098 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ தகவல் அளிக்கலாம். மேலும் இடைநிற்றல் குழந்தைகள் கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பவருக்கு பாராட்டு சான்றிதழும் பரிசும் வீட்டிற்கே வந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். அதிக எண்ணிக்கையில் மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பவர்களுக்கு "கல்வி காவலர்" என்ற சிறப்பு பட்டம், குடியரசு தின விழா அன்று வழங்கி கௌரவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்  தெரிவித்தார்கள்.

23ஆம் தேதி குறைதீர் கூட்டம் எரிவாயு விநியோக புகார்களை தெரிவிக்கலாம் கரூர் கலெக்டர் அழைப்பு. 

கரூரில் 6  முதல் 18 வயதுடைய இடை நின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

வருகிற 23ஆம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எரிவாயு விநியோக புகார்களை தெரிவிக்கலாம் என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் மற்றும் நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக வரப்பெறும் புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளைகள் விநியோகத்தை சீர்படுத்த வசதியாக கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டிசம்பர் 23ஆம் தேதி மாலை 3:30 மணி அளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் இந்த நாளில் நடைபெறும் குறைதீர்க்க கூட்டத்தில் கலந்து கொண்டு, எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம். என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு இணங்க வீடுகள் இல்லாத ஏழை எளிய மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 1152 வீடுகளை 699.31 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வழங்கி வருகிறது.

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக கரூர் வட்டம்  கிராமத்தில் 192 வீடுகள் குழு 16.08 கோடி மதிப்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வீட்டின் மதிப்பு 8.38 லட்சம் இதில் பயனாளியின் பங்குத்தொகை 1.88 லட்சம் மாநில அரசின் பங்கு தொகை குரூப் 5 லட்சம் மத்திய அரசின் பங்குத் தொகை 1.50 இலட்சம் ஆகும். கரூர் வட்டம் புலியூர் கிராமத்தில் 258 அடுக்குமாடி குடியிருப்புகள் 24.91 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வீட்டின் மதிப்பு 8.65 லட்சம் இதில் பயனாளின் பங்கு தொகை ஒரு லட்சம் மாநில அரசன் பங்குத்தொகை 6.15 லட்சம் மத்திய அரசின் பங்குத்தொகை 1.50 இலட்சம் ஆகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Embed widget