மேலும் அறிய

திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்

இளைஞர் அணி நிர்வாகிகள் ஒரே மாதிரியான சீருடையிலும், இளம்பெண்கள் ஒரே மாதிரியான சுடிதார் உடையிலும், பெண்கள் ஒரே மாதிரியான புடவையிலும், ஆண்கள் ஒரே மாதிரியான கட்சி வேட்டி சட்டையிலும் கலந்து கொள்கிறார்

கரூரில்  திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் பணிகள்.

தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம்  அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை ஒன்றிணைத்து இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்

அதன்படி கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியில்  நாளை 17-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.  கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வரவேற்று பேசுகிறார்.

திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்

பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். விழாவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்

இந்த விழாவுக்காக கோடங்கிபட்டி பகுதியில் 50 ஏக்கர் நிலத்தில் பத்து நாட்களுக்கு முன்பு பந்த கால் நடப்பட்டு, 200 அடி அகலம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமான மேடை ஒரு லட்சம் நபர்கள் அமர்வதற்கு இருக்கைகள், தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். மேலும் 67 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஒரே மாதிரியான டீ சர்ட் சீருடையுலும், இளம்பெண்கள் ஒரே மாதிரியான சுடிதார் உடையிலும், பெண்கள் ஒரே மாதிரியான புடவையிலும், ஆண்கள் ஒரே மாதிரியான கட்சி வேட்டி சட்டையிலும் கலந்து கொள்கிறார்.

திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்

விழாவில் பங்கேற்கும் முதல்வர் நாளை விமானம் மூலம் திருச்சி வருகை தந்து அங்கு உறுதிமொழி ஏற்ற பின் அங்கிருந்து கார் மூலம் கரூர் வருகை தருகிறார். கரூர் தான்தோன்றி மலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.  அதன் பின்னர் மாலை 4 மணிக்கு புறப்பட்டு முப்பெரும் விழா நடைபெறும் மேடைக்கு வருகை தர உள்ளார்.

திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்

முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் வருகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழா கோலம் போல் காட்சி அளிக்கிறது குறிப்பாக கரூர் மாநகர் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் போஸ்டர்கள் பேனர்கள் கட்சி கொடி கம்பங்கள் என திமுகவினர் அசத்தியுள்ளனர். அதேபோல் வாழை தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கட்சி கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதல்வரின் வருகையொட்டி கரூரில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் வருகை! பிரம்மாண்ட ஏற்பாடுகள்! எதிர்பார்ப்பில் கரூர் மக்கள்

கொங்கு மண்டலத்தை பொருத்தவரை செந்தில் பாலாஜி என்றாலே பிரம்மாண்டம் என்று முதல்வர் கூறி வரும் நிலையில் தற்போது திமுக முப்பெரும் விழா கரூரில் நாளை நடைபெற உள்ள நிலையில் பல்வேறு பணிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய் ? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய்? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget